8ம் வகுப்பு முடித்தவரா நீங்க.. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் செம ஜாப்..கை நிறைய சம்பளம்.. விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா பல்வேறு நிலைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரத்தை பார்க்கலாம்.

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், அட்டன்டண்ட் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி முடித்தவர்கள் வரை பல்வேறு நிலையிலான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 17/06/2023 முதல் 05/07/2023 வரை விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்: தேர்வு செய்யப்படும்விண்ணப்பதாரர்கள் பீகார் மற்றும் கேரளாவில் பணியமர்த்தப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) முறையில் விண்ணப்பிக்கலாம். வேலைக்கான முழு விவரங்களை https://www.centralbankofindia.co.in/en என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 Central Bank of India Jobs Recruitment - 8th qualification enough? How to Apply – Details

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.8,000 முதல் ரூ.20,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விண்ணப்பட்ட கட்டணம் கிடையாது:

விண்ணப்பிக்கும் முகவரி: C.V.COMPLEX,1ST FLOOR, O. 32/817K, YNAD ROAD, HELAVOOR, IST-CALICUT, KERALA-673571. விண்ணப்பத்தாரர்கள் இந்த முகவரிக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் .

விண்ணப்பிக்க கடைசி நாள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை வரும் 05 ஜூலை 2023. என்ற தேதிக்குள் சென்றடையும் படி மேல் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும். இந்த தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் https://www.centralbankofindia.co.in/en செய்து தெரிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+