சென்ட்ரல் வங்கியில் வேலை! 192 பணியிடம்.. கல்வி தகுதி என்ன? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்
மும்பை: பொதுத்துறை வங்கிகளில் ஒன்று சென்ட்ரல் வங்கி. இந்த வங்கியின் தலமையிடம் மும்பையில் உள்ளது. சென்ட்ரல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
வங்கியில் வேலை பார்க்க வேண்டும் என்பது பலருக்கும் லட்சியமாக இருக்கும். கை நிறைய சம்பளம், சலுகைகள், மாதம் 6 நாட்கள் விடுமுறை என பல வசதிகள் வங்கியில் உள்ளது. சமூகத்தில் அந்தஸ்து மிக்க பணிகளில் ஒன்றாகவும் வங்கி வேலை இருப்பதால் எப்படியாவது வங்கியில் வேலைக்கு சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பட்டதாரிகள் பலரும் படித்து வருவதை பார்க்க முடியும்.

இந்த நிலையில், நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 192 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, அனுபவம், உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்
பணி விவரம்: தகவல் தொழில் நுட்பம் ஏஜிஎம், (scale V: 1 பணியிடம்), ரிஸ்க் மேனேஜர் ஏஜிஎம் ( ஸ்கேல் V: 1) தகவல் தொழில்நுட்பம் ( scale III: 6), பைனான்சியல் அனலிஸ்ட் (scale III: 5), தகவல் தொழில் நுட்பம் (scale II: 73)சட்ட அதிகாரி ( scale II: 15), கிரெடிட் ஆஃபிசர் (scale II: 50), நிதி ஆய்வாளர் (scale II: 4), சிஏ - நிதி & கணக்கியல் (scale II: 3),
தகவல் தொழில் நுட்படம் ( scale I: 15) என மொத்தம் 192 பணியிடங்கள் நிரப்படுகின்றன. கல்வி தகுதியை பொறுத்தவரை துறை ரீதியான பட்டப்படிப்புடன் அனுபவமும் கேட்கப்பட்டுள்ளது. இது குறித்த தெளிவான விவரங்களை விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பாணை லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: தகவல் தொழில் நுட்பம் ஏஜிஎம், ரிஸ்க் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும். தகவல் தொழில் நுட்பம் (எஸ்.எம்) , பைனான்சியல் அனலிஸ்ட் ஆகிய பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐடி (scale II), சட்ட அதிகாரி, கிரெடிட் அதிகாரி ஆகிய பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 33 ஆகும். இதர பணியிடங்களுக்கு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி? தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க வரும் 19 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி மற்றும் பெண்கள் உள்ளிட்ட பிரிவினர் ரூ.175 கட்டணமாக செலுத்தினால் போதும்.
சம்பளம் எவ்வளவு: சம்பளத்தை பொறுத்தவரை பணியிடங்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.1,00,350 வரை வழங்கப்படும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் https://centralbankofindia.co.in/en/recruitments செய்யவும்.
தேர்வு குறித்த அறிவிப்பை படிக்க இந்த லிங்கை கிளிக் https://www.centralbankofindia.co.in/sites/default/files/Notification%20_Recruitment-of-officers-in-specialist-category-in-various-streams-(2023-24).pdf செய்யவும்.
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications