மத்திய அரசு நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி வேலை.. யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? முழுவிபரம்
டெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்ட்ரல் கோல்பில்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 139 ஜூனியர் டேட்டா என்ட்ரி காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோல் இந்திய லிமிடெட் (Coal India Limited or CIL) கீழ் சென்ட்ரல் கோல்பில்ட்ஸ் லிமிடெட் (Central Coalfields Limited Or CCL) நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எத்தனை?
மத்திய கோல்பில்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Jr. Data Entry Operator) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு காலியாக உள்ள 139 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.

கல்வி தகுதி என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் நிமிடத்துக்கு 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதோடு இந்த துறையில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த நிரந்தர ஊழியராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
விண்ணப்பம் செய்ய விரும்புவோரின் வயது என்பது குறைந்தபட்சமாக 18க்குள் இருக்க வேண்டும். அதிகபட்சம் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பிடபிள்யூடி விண்ணப்பத்தாரர்களுக்கு அரசு விதிகளின் படி தளர்வுகள் உண்டு. விண்ணப்பத்தாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் திறனறி தேர்வு(Proficiency Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விருப்பம் உள்ளவர்கள் www.centralcoalfields.in இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கி பூர்த்தி செய்து Personnel/NEE department, Darbhanga House, Ranchi - 834029 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் டிசம்பர் மாதம் 6ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் பக்கத்திலேயே பணிக்கான விண்ணப்பம் இருக்கும். இதனை தான் டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications