மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. டிப்ளமோ முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. ரூ.1.40 லட்சம் சம்பளம்.. விட்றாதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் ஹைட்ரோபவர் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் இன்ஜினியர் பதவி உள்பட பல்வேறு பதவிகளில் மொத்தம் 248 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணபிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை 1.40 லட்சம் சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

மத்திய அரசின் ஹைட்ரோபவர் நிறுவனம் பரதாபாத் தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.ஹெச்.பி.சி., புனல் மின் உற்பத்தியில் ஈடுபடுகிறது. மத்திய அரசின் நவரத்னா வகைக்கு சேர்ந்த இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

central-government-hydro-power-psu-job-recruitment-diploma-holders-eligible-salary-up-to-1-lakh

முதலீட்டு அடிப்படையில், நாட்டில் உள்ள டாப் 10 பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக ஹைட்ரோபவர் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

கல்வி தகுதி:

பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வி தகுதி மாறுபடும். ஜூனியர் இன்ஜினியர் (சிவில்) எஸ் 1 பணிக்கு சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். எஸ்சி/எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். துறை சார்ந்த பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

அனைத்து பணியிடங்களுக்கும் 30 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.

சம்பளம் எவ்வளவு?

கிரேடு E1 - ரூ.40,000 - 1,40,000/-
கிரேடு S1 - ரூ.29,600 - 1,19,500/-
கிரேடு W06 - ரூ.27,000 - 1,05,000/-

எழுத்து தேர்வு

கணிணி வழியிலான எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தில் சென்னையில் தேர்வு நடைபெறும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்னப்பக் கட்டணமாக ரூ.708 செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

https://www.nhpcindia.com/ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்; 02.09.2025 ஆகும். விண்ணப்ப அவகாசம் முடியும் நாள் - 01.10.2025 மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப அறிவிப்பினை படிக்க: https://www.nhpcindia.com/assests/pzi_public/pdf_link/68b0019539a24.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+