மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை..என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. விட்றாதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 550 நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. என்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் உள்ளது. மத்திய நிதி அமைச்சத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த காப்பீட்டு நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது. நாட்டில் உள்ள மிகப்பெரிய தேசியமமாகக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் உள்ளது.

job Employment chennai

தற்போது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 550 நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

ரிஸ்க் என்ஜினியர்ஸ் - 50, ஆட்டொ மொபைல் என்ஜினியர்ஸ் - 75, சட்ட நிபுணர் - 50, அக்கவுண்ட் ஸ்பெஷலிஸ்ட் - 25, ஏஓ (ஹெல்த்) - 50, ஐடி ஸ்பெஷலிஸ்ட் - 25, பிசினஸ் அனலிஸ்ட் - 75, கம்பெனி செகரட்டரி 2, அக்‌ஷுரியல் ஸ்பெஷலிஸ்ட் 5, ஜெனரலிஸ்ட்ஸ் - 193 என மொத்தம் 550 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி:

* ரிஸ்க் என்ஜினியர் பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் என்ஜினியரிங் பட்டம் முடித்து இருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுடம் தேர்ச்சி அவசியம். எஸ்.சி / எஸ்.,டி உள்ளிட்ட பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருந்தால் போதும்.

* ஆட்டோ மொபைல் என்ஜினியர்ஸ் பணியிடங்களுக்கு ஆட்டோ மொபைல் என்ஜினியரிங் பிரிவில் பி இ /பிடெக், எம்.இ/ எம் டெக் உள்ளிட்ட படிப்புகள் எடுத்து இருக்க வேண்டும்.

* லீகல் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு சட்ட படிப்பு முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம்.
* அக்கவுண்ட் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு சிஏ/ மேனேஜ்மண்ட் அக்கவுண்டண்ட், அல்லது எம்பிஏ (ப்பைனன்ஸ் பிஜிடிஎம் பைனான்ஸ்/எம்.காம்) முடித்து இருக்க வேண்டும்.

* ஜெனரலிஸ்ட் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருந்தால் போதும். குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். எஸ்.சி/எஸ்டி பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருந்தால் போதுமனது.

வயது வரம்பு:

21 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அரசு விதிமுறைகள்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை முதன்மை தேர்வு, மெயின் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஜெனரலிஸ்ட் பணிக்கு 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். டெஸ்ட் ஆப் ரீசனிங் 50, ஆங்கில மொழித்தேர்வு 50, Test of General Awareness 50, Quantitative Aptitude 50 மதிப்பெண்கள் என மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.

தேர்வு மையங்கள்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், கடலூர், தர்ம்புரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். விண்ணப்பிக்க வரும் 30 ஆம் தேதி கடைசி நாளாகும்.

தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ibpsonline.ibps.in/niacljul25/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+