ரெடியா?.. மாதஊதியம் ரூ.19,000 டூ 1.77 லட்சம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஏராளமான வேலைவாய்ப்பு!
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் 15 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் டிகிரி, என்ஜினீயரிங், பட்ட மேற்படிப்பு, சட்டம், பிஎச்டி முடித்தவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.77 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயல்பட்டு வருகிறது.
இந்த வாரியத்தில் தற்போது ஏராளமான பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலியிடங்கள் எவ்வளவு?
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் மொத்தம் 15 பிரிவுகளில் 163 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி சயின்டிஸ்ட் பி பணிக்கு 62 பேர், அசிஸ்டென்ட் சட்ட அலுவலர் பணிக்க 6 பேர், அசிஸ்டென்ட் பணிக்கு 3 பேர், சீனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிக்கு 16 பேர், அக்கவுன்ட் அசிஸ்டென்ட் பணிக்கு 2 பேர், ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு 3 பேர், சீனியர் லேபாராட்டரி அசிஸ்டென்ட் பணிக்கு 15 பேர், அப்பர் டிவிசன் கிளர்க் பணிக்கு 16 பேர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு II பணிக்கு 3 பேர், ஜூனியர் லேபாரட்டரி அசிஸ்டென்ட் பணிக்கு 15, பேர் லோவர் டிவிஷன் கிளர்க் பணிக்க 5 பேர், பீல்ட் அட்டென்டன்ட் பணிக்கு 8 பேர், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 7 பேர், அசிஸ்டென்ட் அக்கவுன்ட் அலுவலர், டெக்னிக்கல் சூப்பர்வைசர் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 163 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்சம் 35 வயதாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் பிடபிள்யூபிடி பிரிவினருக்கு 10 வயது வரையும் வயது தளர்வு உண்டு.

கல்வி தகுதி என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் டிகிரி, என்ஜினீயரிங், இளங்கலை சட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பிஎச்டி டிப்ளமோ உள்ளிட்ட படிப்பில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் என்ன?
சயின்டிஸ்ட் பி பணிக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.1.77 லட்சம் வரையும், அசிஸ்டென்ட் சட்ட அலுவலர், அசிஸ்டென்ட் அக்கவுண்ட்ஸ் அலுவலர் பணிக்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.1.41 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்படும். சீனியர் சயின்டிஸ்ட் அசிஸ்டென்ட், அக்கவுன்ட் அசிஸ்டென்ட், அசிஸ்டென்ட், அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட் ஆகிய பணிக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1.12 லட்சம் வரையும், ஜூனியர் டெக்னீசியன், சீனியர் லேபாராட்டரி அசிஸ்டென்ட், அப்பர் டிவிசன் கிளர்க், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும். ஜூனியர் லேபாரட்டரி அசிஸ்டென்ட், லோவர் டிவிஷன் கிளர்க் பணிக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம்,
பீல்ட் அட்டென்டன்ட், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு மாதம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cpcb.nic.in/ ஆன்லைன் மூலம் மார்ச் 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
IT Jobs: நாளை இண்டர்வியூ.. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications