கைநிறைய சம்பளம்.. 10ம் வகுப்பு முதல் டிகிரி வரை எது படித்தாலும் ‛ஓகே’.. செங்கல்பட்டில் அரசு வேலை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், லேப் டெக்னீசியன் உள்பட 8 பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக சுகாதாரத்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் 8 பிரிவுகளுக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நிரப்பப்பட உள்ளது. தேர்வு செய்யப்படுவோர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் காசநோய் பிரிவில் பணியமர்த்தப்படுவார்கள்.
காலியிடங்கள்: அதன்படி மருத்துவ அலுவலர் (Medical Officer) ஒருவர், மாவட்ட பன்முக காசநோய் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் (District DRTB/HIV-TB Coordinator) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் மாவட்ட பிபிஎம் கோ-ஆடினேட்டர் (District PPM Coordinator or DPPMC) பணிக்கு ஒருவர், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (Senior Treatment Supervisors) பணிக்கு 2 பேர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுதவிர லேப் டெக்னீசியன் பணிக்கு 10 பேர், சுகாதார பார்வையாளர் (TB Health Visitor) பணிக்கு 7 பேர், ஆலோசகர் (Counselor) ஒருவர் என மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: மருத்துவ அலுவலர் பணியை விரும்புவோர் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும். மாவட்ட பன்முக காசநோய் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணியை விரும்புவோர் டிகிரி முடித்திருக்க வேண்டும். மாவட்ட பிபிஎம் கோ-ஆடினேட்டர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எம்பிஏ, பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
10ம் வகுப்பு: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10, 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். லேப் டெக்னீசியன் பணிக்கு 12, டிப்ளமோ, டிகிரி படிப்பும், சுகாதார பார்வையாளர் பணிக்கு 12ம் வகுப்பு, டிகிரி, ஆலோசகர் பணிக்கு டிகிரி, பட்டமேற்படிப்பு முடித்திருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதசம்பளம்: மருத்துவ அலுவலர் பணிக்கு ரூ.60 ஆயிரம், மாவட்ட பன்முக காசநோய் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர், மாவட்ட பிபிஎம் கோ-ஆடினேட்டர் பணிகளுக்கு பணிக்கு ரூ.26,500, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணிக்கு ரூ.19,800, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ரூ.13,500, டிபி ஹெல்த் பார்வையாளர் பணிக்கு ரூ.13,300, லேப் டெக்னீசியன், ஆலோசகர் பணிக்கு தலா ரூ.13 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
கடைசி தேதி: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 50 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லை. நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இருப்பினும் இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான 11 மாத பணியாகும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 27 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: விண்ணப்பத்தாரர்கள் அதிகாரப்பூர்வ https://chengalpattu.nic.in/notice_category/recruitment/ இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்துசுய கையொப்பமிட்ட உரிய ஆவணங்களின் நகல்களுடன் வரும் 27 ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரில் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்ப முகவரி: விண்ணப்பங்களை ‛‛மாவட்ட காசநோய் அலுவலர், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் (NTEP), மாவட்ட காசநோய் மையம், மாவட்ட அரசின் தலைமை மருத்துவமனை வளாகம், காஞ்சிபுரம் - 631 501'' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பணி தொடர்பான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கான விண்ணப்பங்களை டவுன்லோட் செய்ய Click Here












Click it and Unblock the Notifications