10ஆவது பாஸா? சென்னை மாநகராட்சியில் அரசு வேலை! 309 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: சென்னை மாநகராட்சியில் 309 தற்காலிக பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10 ஆம் வகுப்பு முதல் பட்டம் படித்தவர்கள் மருத்துவர், செவிலியர், உதவியாளர் போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னை மாநகராட்சி சார்பில் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் (NUHM) கீழ் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 309 காலிப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. மருத்துவம், செவிலியர், தொழில்நுட்பம், நிர்வாகம், உதவியாளர் போன்ற பல்வேறு துறைகள் உள்ளன.
இந்த வேலைவாய்ப்புகளுக்கு 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு படித்தவர்கள், டிப்ளமோ, இளநிலை, முதுகலை பட்டம் வென்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
Public Health Specialist, Medical Officer, Veterinary Officer, Microbiologist போன்ற உயர் கல்வித் தகுதி தேவைப்படும் பணியிடங்களுடன், Staff Nurse, ANM, Lab Technician, X-Ray Technician, Pharmacist போன்ற தொழில்நுட்ப பணியிடங்களும் இடம்பெற்றுள்ளன.
அதேபோல், Office Assistant, Data Entry Operator, Multipurpose Worker போன்ற பணியிடங்கள் குறைந்த கல்வித் தகுதி உள்ளவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பணிகளுக்கு மாத சம்பளமாக ரூ 10 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு எதுவும் இல்லை. குறிப்பிட்ட பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான chennaicorporation.gov.in என்ற தளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, Ripon Buildings, சென்னை - 600003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜனவரி 5 ஆம் தேதி ஆகும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications