சென்னையில் உள்ள கஸ்டம்ஸ் அலுவலகத்தில் வேலை.. கை நிறைய சம்பளம்! சூப்பர் சான்ஸ்.. விட்றாதீங்க
சென்னை: மத்திய அரசின் சென்னையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.63 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கான தகுதிகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
மத்திய வருவாய் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுங்கத்துறை நாடு முழுவதும் கப்பல் துறைமுகங்கள் மற்றும் சர்வதேச விமான அலுவலகங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றன. சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் பொருட்கள், வரி ஏய்ப்பு ஆகியவற்றை கண்கானிக்கும் அமைப்பாக சுங்க இலாகா உள்ளது.

சுங்கத்துறை அலுவலகம்
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இதன் அலுவலகம் உள்ளது. அந்த வகையில், சென்னையிலும் சுங்கத்துறை அலுவலகம் உள்ளது. மத்திய அரசு பணி என்பதால் இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல ஆயிரங்களில் சம்பளம் கிடைக்கிறது. சென்னையில் உள்ள சுங்க அலுவலகத்தில் காலியாக உள்ள 10 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
டிரேட்ஸ்மேன் (Tradesman) - 02
மாலுமி (Seaman) - 06
எந்திர எண்ணெய் பராமரிப்பாளர் (Greaser) - 02
கல்வித் தகுதி:
* டிரேட்ஸ்மேன் பணிக்கு மெக்கானிக்/ டீசல்/ ஃபிட்டர்/வெல்டர்/எலக்ட்ரிஷியன் உள்ளிட்ட ஏதேனும் ஒரு படப்பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். ஒராண்டு பணி அனுபவம் அவசியம்.
* சீமேன் பதவிக்கு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியுடன் கடலில் செல்லும் இயந்திரக் கப்பலில் மூன்று வருட அனுபவம், பெற்று இருக்க வேண்டும்.
* Greaser பணிக்கு குறைந்தட்சம் 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் கடலில் இயங்கும் இயந்திரமயமாக்கப்பட்ட கப்பல்களில், முதன்மை மற்றும் துணை இயந்திரங்களைப் பராமரிப்பதில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேற்கூறிய பணியிடங்களுக்கான கல்வித் தகுதியின் முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
18-வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு:
* டிரேட்ஸ்மேன்: (லெவல் 2) ரூ..19,900 - 63,200/-
* சீமேன்- ரூ.18,000 - 56,900/-
* Greaser - ரூ.18,000 - 56,900/-
தேர்வு முறை:
எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு ஆகியவை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். https://chennaicustoms.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வெவ்வேறு பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்களின் நகல்களை அளிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து The Additional Commissioner Of Customs (establishment), Office Of The Commissioner Of Customs (general), 2nd Floor, Krishna Block, Rajaji Salai, Chennai-600001- Email Id - [email protected]. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வரும் 30.04.2026 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பை படிக்க: https://chennaicustoms.gov.in/
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications