மாதம் 58,000 சம்பளத்தில் சென்னை ஹைகோர்ட்டில் வேலை.. 392 பணியிடங்கள்..விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
சென்னை: சென்னை ஹைகோர்ட் உள்பட தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் 392 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். அலுவலக உதவியாளர் உள்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு மாதம் ரூ.50,000 சம்பளம் வழங்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு வாரியம், தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் அலுவலக உதவியாளர், சோப்தார், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு 8ஆம் வகுப்பு கல்வித் தகுதி முதல் டிகிரி கல்வித் தகுதி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

அரசு வேலை என்ற காரணத்தால் பணி பாதுகாப்பு, கை நிறைய சம்பளம் கிடைக்கும். இதனால் தேர்வர்கள் பலரும் இந்த அறிவிப்பினை எதிர்பார்த்து காத்திருந்தனர். கடந்த மாதமே அறிவிப்பு வெளியான நிலையில் இன்று இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த சான்ஸை பயன்படுத்தி கொள்ளுங்கள். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
சோப்தார் - 12, அலுவலக உதவியாளர் - 137, குடியிருப்பு உதவியாளர் - 87, ரூம் பாய் - 04, துப்புரவு பணியாளர் - 73, தோட்டக்காரர் - 24, வாட்டர்மேன் - 02, துப்புரவு பணியாளர் - 49, வாட்ச்மேன் - 04 என மொத்தம் 392 பணியிடங்களை நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி:
8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் சோப்தார் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதேபோன்று அலுவலக உதவியாளர், குடியிருப்பு உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி முடித்திருந்தால் போதும். இதில், இலகு ரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வைத்து இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஹவுஸ் கீப்பிங், சமையல் போன்றவற்றில் அனுபவம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
குடியிருப்பு உதவியாளர் பணிக்கு ஓராண்டு craft course முடித்து இருப்பதும் அவசியம் ஆகும். இதேபோல் தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். ஓட்டுனர் உரிமை தமிழ், ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இதர பணியிடங்கள் அனைத்திற்கும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்துகொள்ளலாம்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை 01.07.2025 தேதிப்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். வயது உச்ச வரம்பினை பொறுத்தவரை அதிகபட்சமாக 37 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். பொதுப்பிரிவினை சேர்ந்தவர்கள் என்றால் 32 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
சம்பளம் எவ்வளவு?:
* அலுவலக உதவியாளர் - ரூ.15,700 முதல் 58,100 /-
* குடியிருப்பு உதவியாளர் - ரூ.15,700 முதல் 58,100 /-
* சோப்தார் - ரூ.15,700 முதல் 58,100 /-
* அறை பணியாளர் - ரூ.15,700 முதல் 58,100 /-
* தோட்டக்காரர் - ரூ.15,700 முதல் 58,100 /-
* துப்புரவு பணியாளர் -ரூ.15,700 முதல் 58,100 /-
* வாட்டர்மேன் - ரூ.15,700 முதல் 58,100 /-
* சுகாதார பணியாளர் முதல் ரூ.15,700 - 58,100 /-
* வாட்ச்மேன் - ரூ.15,700 முதல் 58,100 /-
விண்ணப்பிக்க கடைசி நாள்:
தேர்வு முறையை பொறுத்தவரை முதலில் எழுத்து தேர்வும் பின்னர் திறன் தேர்வும் வைக்கப்பட்டு அதன் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை பொதுப்பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி / எஸ்.டி உள்ளிட்ட பிரிவினர் என்றால் விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பத்தாரர்கள் (https://www.mhc.tn.gov.in/) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.mhc.tn.gov.in/recruitment/login இங்கே கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications