மாதஊதியம் ரூ.51,500 முதல் ரூ.63,070.. மாவட்ட நீதிபதியாக விருப்பமா? 50 காலியிடம்! அசத்தலான வாய்ப்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் காலியாக உள்ள 50 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.51,500 முதல் ரூ.63,070 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் காலியாக உள்ள 50 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பத்தாரர்கள் சட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் வழக்கறிஞராக 7 ஆண்டு பணி செய்ய வேண்டும்.

இந்த பணியை பெற விரும்புவோர் 35 வயது முதல் 47 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சி ஏ, எஸ்டி பிரிவினர் 50 வயதுக்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் (எஸ்சி/எஸ்டி) பிரிவினர் என்றால் 60 வயது வரையும் வயது தளர்வு வழங்கப்படுகிறது. விண்ணப்பம் செய்வோரின் வயது என்பது 01.07.2023ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
மேலும் விண்ணப்ப கட்டணமாக ரூ.2 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்சி ஏ, எஸ்டி, மாற்றத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.51,500 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ரூ.63,070 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.tn.gov.in, https://www.hcmadras.tn.nic.in இணையதளம் மூலம் ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கான முதன்மை தேர்வு செப்டம்பர் மாதம் 30ம் தேதியும், மெயின் தேர்வு டிசம்பர் 2, 3 தேதிகளிலும், நேர்க்காணல் 2024 ஜனவரி 31ம் தேதிக்கு பிறகும் நடைபெற உள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications