சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை.. 1,010 பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு, ஐடிஐ தகுதி தான்
சென்னை: சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,010 அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
சென்னை அயனவாரத்தில் ஐசிஎப் எனப்படும் ரயில்வே பெட்டி தொழிற்சாலை உள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்த தொழிற்சாலையில், பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை பர்க்கலாம்.

பணியிடங்கள்:
மொத்தம் 1010 அப்ரண்டீஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
துறை வாரியாக காலியிடங்கள்:
கார்பெண்டர் - 40
எலக்ட்ரிஷியன் - 40
ஃபிட்டர் - 80
மெஷினிஸ்ட் - 40
பெயிண்டர் - 40
வெல்டர் - 80
எம்.எல்.டி ரேடியோலாஜி - 05
எம்.எல்.டி பதோலஜி - 05
Ex ஐடிஐ:
கார்பெண்டர் - 50
எலக்ட்ரிஷியன் - 160
ஃபிட்டர் - 180
மெஷினிஸ்ட் - 50
பெயிண்டர் - 50
வெல்டர் - 180
பி ஏஎஸ்.எஸ்.ஏ - 10
கல்வித் தகுதி:
பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கான காலியிடங்கள் உள்ளன. எம்.எல்.டி (ரேடியோலாஜி& பதோலஜி) பணிக்கு 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், பயாலஜி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
07.09.2026 அன்று தேதிப்படி 15 வயது பூர்த்தியாகிருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஐடிஐ இல்லாத பணியிடங்களுக்கு 22 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
ஊதியம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் அப்ரெண்டீஸ் பணியாளர்கள் ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ.8,200 ஊதியமும், 12 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ.9,600 ஊதியமாகவும் வழங்கப்படும். எக்ஸ் ஐடிஐ கல்வி தகுதிக்கு ரூ.9,600 ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:
மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வரும் 07.09.2026 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பை படிக்க: Click Here


Click it and Unblock the Notifications
