‛ஜாக்பாட்’.. ரூ.1.12 லட்சம் வரை ஊதியம்.. டிகிரி, என்ஜினீயரிங் முடித்தவரா நீங்க? சென்னையிலேயே பணி
சென்னை: சென்னையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு டிகிரி, என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.35,400 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை வழங்கப்படும்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council Of Medical Reserch or ICMR) செயல்பட்டு வருகிறது. இந்த கவுன்சிலின் கீழ் நாட்டின் பல்வேறு இடங்களில் வெவ்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

சென்னை அய்யப்பாக்கம் தமிழ்நாடு ஹவுசிங் போர்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (National Institute of Epidemology or NIE) அமைந்துள்ளது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளது.
காலியிடங்கள்: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவில் பயோஸ்டட்டிஸ்டிக்ஸ் பணிக்கு 6 பேர், ப்ரோகிராமர், லேபாராட்டரி, பப்ளிக் ஹெல்த், பீல்ட் அக்டிவிட்டிஸ் பணிக்கு தலா 5 பேர், சோசியல் சயின்ஸ், எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் பணிக்கு தலா 2 பேர், மேனேஜ்மென்ட், கம்யூனிகேசன், நெட்வொ்க்கிங் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 33 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: இதில் பயோ ஸ்டேட்டிடிக்ஸ் பணிக்கு இளங்கலை பட்டப்படிப்பை ஸ்டேட்டிடிக்ஸ், அப்ளைட் ஸ்டேட்டிடிக்ஸ், பயோ ஸ்டேட்டிடிக்ஸ், நெட்வொர்க்கிங், ப்ரோகிராமர் பணிகளுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும்.
லேபாராட்டரி பணிக்கு இளங்கலை பிரிவில் மைக்ரோபயலாஜி, மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி படிப்பையும், ரீசர்ஜ் மேனேஜ்மென்ட் பணிக்கு பிகாம் உள்பட இளங்கலை பட்டப்படிப்பி்ல ஹெல்த் மேனேஜ்மென்ட், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், பப்ளிக் ஹெல்த், Epdimiology, கம்யூனிட்டி ஹெல்த், கிளினிக்கல் ரீசர்ஜ், பயோமெடிக்கல் சயின்ஸ், பயோ டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளையும், கம்யூனிகேசன் பணிக்கு மாஸ்/விசுவல் கம்யூனிகேசன் அட்வடைஸ்மென்ட், டிசைனிங் படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
சோசியல் சயின்ஸ் பணிக்கு இளங்கலை பிரிவில் சோசியாலஜி, மெடிக்கல் சோசியாலஜி, அந்த்ரோபாலஜி, சோசியல் வொர்க் படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். பப்ளிக் ஹெல்த் பணிக்கு பப்ளிக் ஹெல்த், Epidemiology, கம்யூனிட்டி ஹெல்த், மெடிக்கல் சோசியாலஜி, அந்தரோபாலஜி படிப்பில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
பீல்ட் ஆக்டிவிட்டிஸ் பணிக்கு இளங்கலை பட்டப்படிப்பை ஆந்த்ரோபாலஜி, எகானாமிக்ஸ், மெடிக்கல் சோசியாலஜி, நியூட்ரிசன், சைக்காலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பணிக்கு டிப்ளமோ எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பை முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்/டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் குறைந்தபட்சம் 10 வயது முதல் அதிகபட்சம் 15 வயது வரையும் தளர்வு வழங்கப்படும்.
மாதசம்பளம்: இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.35,400 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு தேர்வாகும் அனைவரும் நிரந்தரமாக பணியமர்த்தப்பட உள்ளனர்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நவம்பர் மாதம் 8 ம் தேதி மாலை 5.30 மணிக்குள் https://nie.icmr.org.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் சிபிடி (Computer Based TEst), சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்!












Click it and Unblock the Notifications