மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வேலை.. 1.16 லட்சம் வரை சம்பளம்! தமிழில் எழுத படிக்க தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 19 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.1.16 லட்சம் சம்பளம் அதிகபட்சமாக வழங்கப்படுகிறது. தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் என்ஜினியரிங் முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். முக்கியமான நாட்களில் இந்த கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடியும். தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, இந்த கோயிலில் நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகிறது.

chennai-mylapore-kapaleeswarar-temple-recruitment-2025-19-vacancies-submit-your-application

கபாலீஸ்வரர் கோயில்

பிரபலமான இந்த கோயிலில் காலியாக உள்ள 19 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

உதவி பொறியாளர் (சிவில்) - 01
ஜூனியர் உதவியாளர் - 02
டிக்கெட் விற்பனையாளர் - 03
தமிழ் புலவர் - 01
உதவி எலக்ட்ரீஷியன் - 02
பாரா - 06
குருக்கள் / அர்ச்சகர் - 01
காவலாளர் - 01
உதவி பரிசாரகர் - 02 என மொத்தம் 19 பணியிடங்கள் உள்ளன. '

கல்வித் தகுதி:

* உதவி பொறியாளர் (சிவில்): கட்டட பொறியியலில் பொறியியல் இளநிலைபட்டம் அல்லது பொறியாளர்களுக்கான கல்வி நிறுவனத்தில் பிரிவு ஏ மற்றும் பி-யில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் பொறியியலை ஒரு பாடமாக பயின்று இருக்க வேண்டும்.
* இளநிலை உதவியாளர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிகப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்று இருக்க வேண்டும்.

* சீட்டு விற்பனையாளர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில் நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்
* தமிழ்புலவர் பணிக்கு ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது அதற்கு இணையான தமிழில் பிஏ அல்லது பி.லிட் அல்லது எம்.லிட் பட்டம் பெற்று இருக்க வேண்டும். திருமறைகள் ஒப்புவித்தல் திறன் பெற்று இருக்க வேண்டும்.

* பாரா மற்றும் காவலர் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.
* உதவி பரிச்சாரகர் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். மற்றும் கோயில்களில் வழக்கங்களுக்கு ஏற்ப நெய்வேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்து இருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு?

* உதவி பொறியாளர் (சிவில்) - ரூ.36,700 - 1,16,200/-
* ஜூனியர் உதவியாளர் - ரூ.18,500 - 58,600/-
* டிக்கெட் விற்பனையாளர் - ரூ.18,500 - 58,600/-
* தமிழ் புலவர் - 2 ரூ.18,500 - 58,600/-
* உதவி எலக்ட்ரீஷியன் - ரூ.16,600 - 52,400/-
* பாரா - ரூ.15,900 - 50,400/-
* குருக்கள் / அர்ச்சகர் - ரூ.11,600 - 36,800/-
* காவலாளர் - ரூ.11,600 - 36,800/-
* உதவி பரிசாரகர் - ரூ.10,000 - 31,500/-

வயது வரம்பு:

18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்வது அவசியம். https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in. என்ற இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளவும்.

விண்ணப்ப படிவம், தகுதிகள் மற்றும் இதர விவரங்களை www.hrce.tn.gov.in மற்றும் https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய தகுதிச்சான்றுகளுடன் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ 27.11.2025 தேதி முதல் 28.12.2025 தேதி வரை மாலை 5.45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். மேற்படி தேதிக்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்,
மயிலாப்பூர், சென்னை-600 004.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+