சிஐஎஸ்எப்-இல் வேலை! 1,161 பணியிடங்கள்.. மாதம் 69,000 சம்பளம்.. 10ம் வகுப்பு தகுதி! அருமையான வாய்ப்பு
சென்னை: மத்திய தொழில் பாதுகாப்பு படையான சிஐஎஸ்எஃபில் 1161 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்னப்பதாரர்களுக்கு மாதம் ரூ.69 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையான சிஐஎஸ்எப் CISF விமான நிலையம், அரசின் முக்கியமான நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிஐஎஸ்எப்பில் காலியாக உள்ள 1,161 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்படுள்ளது. கான்ஸ்டபிள்/டிரேட்ஸ்மேன் ஆகிய காலிப்பணியிடங்கள் உள்ளன.

டிரேட்ஸ்மேன் பணியை பொறுத்தவரை சமையல், தையல், பெயிண்டிங், பார்பர், சலவை, தச்சு வேலை உள்ளிட்ட பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. கல்வி தகுதியை பொறுத்தவரை குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு பாஸ் செய்து இருக்க வேண்டும். ஏபரல் 2025 க்கு முன்பாக தேவையான குறைந்தபட்ச கல்வி தகுதியை பெற்ற விண்னப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பணியிடங்கள் விவரம்:
ஆண்: 945
பெண்: 103
முன்னாள் ராணுவத்தினர்: 113
என 1,161 பணியிடங்கள் உள்ளன.
சமையலர்: 493
டெய்லர்: 28
சலவை செய்பவர்: 163
பெயிண்டர்: 09
மேஸ்திரி: 13
வெல்டர்: 13
சார்ஜ் மெக்கானிக்: 22 ஆகிய பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு & கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 23 ஆகும். (01.08.2025) தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். அரசு விதிகளின் படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும். கல்வி தகுதியை பொறுத்தவரை பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் துறைசார்ந்த பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ₹21,700 முதல் அதிகபட்சம் ₹69,100 வரை வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை உடல் தகுதி தேர்வு நடைபெறும்.அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, விண்ணப்பிக்கும் பணிக்கான திறனை அறிந்து கொள்ள டிரேட்ஸ்மேன் தேர்வு, எழுத்து தேர்வு, கடைசி கட்ட மருத்துவ பரிசோதனை அகியவை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 5-03-2025. தேர்வு அறிவிப்பு வெளியான நாள்: 17-02-2025. விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள். 3-04-2025
விண்ணப்பிப்பது எப்படி?: ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை முறையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: தேர்வு அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள தகுதிகள் இருப்பதை உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications