சொக்கா.. சொக்கா.. 4 ஆயிரம் வேலை காலியா இருக்குதாம்.. பேங்ஸ் ஜாப் வேற.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 4045 கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பெற்றுவிட வேண்டும் என்பது வேலை தேடும் இளைஞர்களின் பெரும் லட்சியங்களில் ஒன்றாக உள்ளது. அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல மணி நேரங்கள் தினமும் படித்த இளைஞர்கள் பலரும் நூலககங்களுக்கு சென்றும் கோச்சிங் செண்டர்களில் சேர்ந்தும் படித்து வருவதை காண முடியும்.

அதிலும் கவுரவமான வேலை, நல்ல சம்பளம் என்பதால் வங்கிப் பணிகளில் சேர்ந்து விட வேண்டும் என பல தேர்வர்களும் விருப்பப்படுவார்கள். இந்த நிலையில், தான் ஐபிபிஎஸ் வங்கியில் கிளர்க் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கான விண்ணப்பிக்கும் அவகாசம் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. கடந்த 21 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், மேலும் ஒருவாரம் தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 28 ஆம் தேதி ஆகும். எனவே, இதுவரை விண்ணப்பிக்காமல் இருந்தாலும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. தேர்வர்களுக்கான கல்வி தகுதி வயது வரம்பு உள்ளிட்டவற்றை கீழே காணலாம்.
எந்தெந்த வங்கிகள்: எஸ்.பி.ஐ தவிர்த்து நாட்டில் உள்ள பிற பொதுத்துறை வங்கிகளான இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யு.சி.ஓ. வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா,பஞ்சாப் நேசனல் வங்கி,யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி, பஞ்சாப் அன்ட் சிந்த வங்கி ஆகிய 11 வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு ஐபிபிஎஸ் (IBPS) மூலமாக நடக்கிறது. எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 4045 கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: டிகிரி முடித்தவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கணினியில் பணிபுரியும் அனுபவம் இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்புகளில் தளர்வு உண்டு. தேர்வு குறித்த முழு விவரங்களை தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு எப்படி நடைபெறும்?: ஆன்லைன் மூலமாக எழுத்துத் தேர்வு நடைபெறும். முதன் நிலை தேர்வு, மெயின் எக்ஸாம் ஆகியவை நடைபெறும். தேர்வு மையங்களை பொறுத்தவரை சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு, மதுரை நாகர்கோவில்,நெல்லை, வேலூர், விருதுநகர், சேலம் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தேர்வு நடைபெறும். எழுத்து தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்: ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொது பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் ரூ. 175 செலுத்த வேஏண்டும். மேலும் விவரங்களுக்கு https://www.ibps.in/wp-content/uploads/Final_Notification_CRP_CLERKS_XIII_30.6.23.pdf கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications