இரவோடு இரவாக.. ஸ்டாலின் அனுப்பிய அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.. குவிந்த வேலை.. சிறப்பான சம்பவம்!
சென்னை: போக்குவரத்துத் துறை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளுக்கு இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய நிலையில் தேர்வு எழுதிய பலருக்கு பணி நியமன ஆணை சமீபத்தில் வழங்கப்பட்டது. மீன்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 65 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் நேற்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக மீன்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 65 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
மீன்வளத்தை பாதுகாத்தல், நிலைக்கத்தக்க மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களுக்கு நிதியுதவி, மீன்பிடி படகுகளுக்கு வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வழங்குதல், பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்குதல், புதிய சூரை மீன்பிடி தூண்டில் மற்றும் செவுள் வலை விசைப்படகுகளை வாங்கிட மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மீனவ மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
போக்குவரத்து ஊழியர்கள்: இந்த நிலையில்தான் போக்குவரத்துத் துறை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பணியின் போது மறைந்த மாநகர் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த பணியாளர்களின் 14 வாரிசுதாரர்களுக்கும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த பணியாளர்களின் 3 வாரிசுதாரர்களுக்கும் கருணை அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர் ஆகிய பணிகளுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார், என்று கூறி உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் அரசுத் துறைகளில் 68,039 இளைஞர்களுக்கும், தனியார் நிறுவனங்களில் 5,08,055 இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக 34,384 நபர்களுக்கும், பல்வேறு அரசுத்துறைகளில் நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளின் வாயிலாக 33,655 நபர்களுக்கும் என மொத்தம் 68,039 நபர்களுக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு: மேலும், கடந்த சுதந்திர தின விழா உரையின்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருந்தவாறு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 75,000 இளைஞர்கள் பல்வேறு அரசு துறைகளில் பணி நியமனம் செய்ய ஏதுவாக சம்பந்தப்பட்ட அமைப்புகள், அரசுத் துறைகள் வாயிலாக ஆயத்தப் பணிகள் செவ்வனே நடைபெற்று வருகின்றன. என்று தமிழ்நாடு அரசு கூறி உள்ளது.












Click it and Unblock the Notifications