டைப்பிங் தெரியுமா? பிகாம், பிஏ, பிஎஸ்சி உள்பட டிகிரி முடித்தாலே சென்னையில் வேலை! அழைக்கும் Cognizant

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட்-ல் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி படிப்பை முடித்து டைப்பிங் தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

பிரப ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் (Cognizant) உள்ளது. Cognizant Technology Solutions Corporation எனும் இந்த நிறுவனம் சென்னை, பெங்களூர், கொல்கத்தா உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

it jobs job jobs

இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம் வருமாறு:

காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது ப்ராசஸ் எக்ஸிக்கியூட்டிவ் - டேட்டா (Process Executive - Data) என்ற பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது Non Voice Process வகை பணியாகும். இந்த பணிக்கு டைப்பிங் தெரிந்த அதேவேளையில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த பணிக்கு 2024ம் ஆண்டு படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் விண்ணப்பம் செய்வோர் அலுவலகத்தில் இருந்து நைட் ஷிப்ட் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை மற்றும் கொல்கத்தாவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்பட உள்ளது.

இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளனர்கள் முறைப்படி ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடியலாம் என்பதால் சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+