ரூ.4 லட்சம் சம்பளத்தில் வேலை.. அழைக்கும் Cognizant ஐடி நிறுவனம்.. ஜனவரி 18 வரை தேதி நீட்டிப்பு
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட்டில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை உள்பட 9 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்ப தேதி ஜனவரி 12ம் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது ஜனவரி 18 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளம் கிடைக்கும்.
காக்னிசண்ட்டில் (Cognizant) இருந்து அவ்வப்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் Pre Assessed hiring For Engineering Graduates - Gen C. என்ற பெயரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இது இன்ஜினியரிங் கிராசூவேட்களுக்கான GenC பணியாகும்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு முன்அனுபவம் என்பது தேவையில்லை. 2024, 2025ம் ஆண்டில் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் படிப்பை முடித்திருந்தாலே போதும்.
பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் உள்ளிட்டவற்றில் லெதர் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது. மற்ற படிப்பு என்றால் 60 சதவீத மதிப்பெண்ணுடன் 10, பிளஸ் 2, டிப்ளமோ, யுஜி, பிஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். 59.9 சதவீத மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்தவர்களும், அரியர்ஸ் இருப்பவர்களுக்கும் அனுமதியில்லை. அதேபோல் அரியர்ஸ் இருக்க கூடாது.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும். இந்த பணிக்கு Cognizant இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய ஜனவரி 12ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 12ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பம் செய்யும்போது ரெஸ்யூம் உடன் சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை இணைக்க வேண்டும். Industry Accredited Certificate இருந்தால் இணைக்க வேண்டும். பார்ன் கார்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். அதில் அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும். அதேபோல் வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்டவை கட்டாயமாக இருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த பணிக்கான விபரங்கள் அனைத்தும் Superset-ல் பதிவு செய்யப்படும் இ-மெயில் ஐடி மூலம் தான் தெரிவிக்கப்படும். இதனால் சொந்த மெயில் ஐடியை வழங்க வேண்டும். ஒருமுறை இ-மெயில் முகவரி கொடுத்த பிறகு அதனை மீண்டும் மாற்றம் செய்ய முடியாது. இதனால் கவனமாக சரியான இ-மெயில் முகவரியை கொடுக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் மொத்தம் 9 இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை, கோவையில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதுதவிர பெங்களூர், ஹைதராபாத், புனே, கொல்கத்தா, புவனேஸ்வர், இந்தூரில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் நிறுவனங்களிலும் பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் கூடுதல் விவரங்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications