ஐடி ஊழியர்களுக்கு பெரிய சிக்கல்.. டீ, காபி பிரேக் எடுக்குறீங்களா? காக்னிசென்ட் வைத்த.. பயங்கர செக்!
சென்னை: காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், தங்கள் ஊழியர்களின் உற்பத்தித்திறனைக் கண்காணிக்க புதிய முறைகளை ஆராய்ந்து வருகிறது. மவுஸ் மற்றும் கீபோர்டு செயல்பாடுகளைக் கண்காணிப்பதன் மூலம் ஊழியர்கள் வேலை செய்யாமல் இருப்பதை இந்த நிறுவனம் கண்டறிய திட்டமிட்டுள்ளது. நாஸ்டாக் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த நிறுவனம், இந்திய பங்குச் சந்தைகளிலும் பட்டியலிடப்பட பரிசீலித்து வருகிறது.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, காக்னிசென்ட் நிறுவனம், ProHance போன்ற பணியாளர் மேலாண்மை கருவிகளைப் பற்றி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியது. இதன் மூலம், நுண்-கண்காணிப்பு நடவடிக்கைகளை இந்த நிறுவனம் தொடங்கி உள்ளது. அதாவது ஊழியர்களை தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளது.

காக்னிசென்ட் வைத்த செக்
இந்த பயிற்சியானது, ஊழியர்கள் எவ்வளவு நேரம் மவுஸ் அல்லது கீபோர்டைப் பயன்படுத்த வேண்டும், மற்றும் எவ்வளவு நேரம் சிஸ்டத்திலிருந்து விலகி இருக்கலாம் என்பதை வரையறுக்கிறது. 300 வினாடிகளுக்கு மேல் மவுஸ் அல்லது கீபோர்டு செயல்பாடு இல்லாவிட்டால், ஊழியர் "செயல்பாட்டற்றவர்" என்று குறிக்கப்படுவார் என்று அறிக்கை கூறுகிறது.
அதேபோல், ஊழியரின் கணினி 15 நிமிடங்கள் செயலற்று இருந்தால், அவர் "சிஸ்டத்திலிருந்து விலகி மற்ற நடவடிக்கைகளில்" ஈடுபடுவதாகக் குறிக்கப்படும். இந்த நேர வரம்புகள் குறிப்பிட்ட குழுக்களின் விருப்பத்திற்கு உட்பட்டவை.
இந்த பயிற்சி எத்தனை ஊழியர்களுடன் பகிரப்பட்டது, ProHance தவிர வேறு கருவிகள் இதில் உள்ளனவா, அல்லது இது எப்போது நிறுவனம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
காக்னிசென்ட் தரப்பு தகவல்
ஆனால், இந்த கருவிகள் ஊழியர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு இப்போதைக்கு பயன்படுத்தப்படாது என்பது ஒரு நல்ல செய்தி. இப்போதைக்கு சோதனை நிலையிலேயே இது உள்ளது. எப்போது இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று காக்னிசென்ட் தெரிவிக்கவில்லை.
ProHance மற்றும் Sapience போன்ற பணியாளர் மேலாண்மை கருவிகள், ஊழியர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சிஸ்டத்தில் செலவழித்த நேரம், ப்ராங்ஜெக்ட் வலைத்தளங்களில் செலவழித்த நேரம் மற்றும் ஓய்வு நேரம் ஆகியவை கண்காணிக்கப்படும்.
ProHance வலைத்தளத்தின் படி, பிரிட்டிஷ் சில்லறை வணிக நிறுவனமான டெஸ்கோ, இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ லிமிடெட், அதன் சிறிய நிறுவனமான ஃபர்ஸ்ட் சோர்ஸ் சொல்யூஷன்ஸ் லிமிடெட் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டு நிறுவனமான ஜோன்ஸ் லாங் லாசாலே ஐபி, இன்க்., அல்லது ஜேஎல்எல் ஆகிய நிறுவனங்கள் ProHance ஐப் பயன்படுத்துகின்றன. இப்போது காக்னிசென்ட் இதே திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுக்க ஐடி துறையில் ஊழியர்கள் பலர் நீக்கப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில்தான் காக்னிசன்ட் நிறுவனம் புதிய பணியாளர்களை பணிக்கு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பணியிடங்களை மாற்றியமைக்கும் சூழலில், காக்னிசன்ட் நிறுவனம் புதிய பணியாளர்களை அதிக அளவில் பணியமர்த்தி வருகிறது. இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு கல்லூரி படிப்பை முடித்த இளம் பட்டதாரிகளைப் பணியமர்த்த இருப்பதாக தலைமை நிர்வாக அதிகாரி ரவி குமார் எஸ் தெரிவித்து உள்ளார்.
செயற்கை நுண்ணறிவு பணியாளர் எண்ணிக்கை
ஒரு கல்லூரிப் பட்டதாரிக்குத் தேவையான கருவிகளைக் கொடுத்து, அவர்களது திறனுக்கு அப்பாற்பட்டுச் செயல்பட வைக்க முடியும். செயற்கை நுண்ணறிவு மனித ஆற்றலை அதிகரிக்கும் ஒரு கருவி; இது வேலைகளை நீக்கும் ஒரு உத்தி அல்ல. அதனால் புதிய ஊழியர்களை நாங்கள் பணிக்கு எடுக்கிறோம். இதன் மூலம் அவர்களுக்கு ஏஐ தொழில்நுட்பம் கொடுத்து அவர்களுக்கு பணி செய்ய நல்ல சூழலை வழங்குகிறோம், என்று காக்னிசன்ட் நிறுவனம் கூறி உள்ளது.












Click it and Unblock the Notifications