கைநிறைய சம்பளம்.. கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் குவிந்திருக்கும் வேலை வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க
கோவை: கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், செயலாளர், ஜூனியர் உதவியாளர் உள்பட மொத்தம் 110 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் மாவட்டம் வாரியாக பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி மாநிலத்தில் மொத்தம் 2,257 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் மட்டம் 110 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: கோவை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு .தவியாளர் பணிக்கு 54 பேர், நகர கூட்டறவு கடன் சங்கத்தின் உதவியாளர் பணிக்கு 2 பேர், நகர கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு 28 பேர், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் மேற்பார்வையாளர் பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் பணியாளர் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் செயலாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு தலா 4 பேர், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை உதவியாளர் பணிக்கு 5 பேர், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் உதவியாளர் பணிக்கு 3 பேர், கூட்டுறவு அச்சகத்தின் உதவியாளர் பணிக்கு ஒருவர், துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் இளநிலை உதவியாளர் பணிக்கு 7 பேர் என மொத்தம் 110 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 01.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க ணே்டும். அதாவது மேற்கூறிய தேதிக்குள் முன்பு பிறந்தவராக விண்ணப்பத்தாரர்கள் இருக்க கூடாது. பொதுப்பிரிவினர் என்றால் 32 வயதும், பொதுப்பிரிவை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் என்றால் 50 வயதுக்குள்ளும், பொதுப்பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் என்றால் 42 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
மேலும் ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், கணவர் இல்லாத பெண்கள் உள்ளிட்டோருக்கு வயது வரம்பு என்பது கிடையாது.
கல்வி தகுதி: விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்து கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் 10, 12ம் வகுப்பு முறைப்படி பள்ளியில் முடித்து 15 ஆண்டு ராணுவத்தில் பணிபுரிந்து ராணுவத்தால் வழங்கப்படும் பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றிருக்கும் முன்னாள் வீரர்களும் விண்ணப்பம் செய்யலாம். மேலும் கூட்டுறவு சார்ந்த பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கும் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.drbcbe.in/ என்ற இணையதளம் மூலம் டிசம்பர் 1ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோர் விண்ணப்ப கட்டணமாக ரூ.250 மட்டும் செலுத்தினால் போதுமானது.
இப்படி விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வு என்பது டிசம்பர் மாதம் 24ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். தற்போதைய அறிவிப்பின் மாதசம்பளம் குறித்த விபரம் வெளியிடவில்லை. இருப்பினும் கூட்டுறவு சங்கங்களின் விதிகளின் படி கைநிறைய சம்பளம் வழங்கப்படலாம்.
பணி தொடர்பான கூடுதல் விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here


Click it and Unblock the Notifications
