அசத்துங்க! டிகிரி போதும்.. கோவை மாநகராட்சியில் சூப்பர் வேலைவாய்ப்பு! நாளை கடைசி நாள்! தேர்வு இல்லை
கோவை: கோவை மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் ‛அக்கவுண்ட் அசிஸ்டென்ட்' மற்றும் ‛டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்' பணிகள் நிரப்பப்பட உள்ளது. தேர்வு இல்லாத இந்த பணிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) நேர்க்காணல் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் தேசிய நகர்புற சுகாதார இயக்கம் சார்பில் மாவட்டம், மாநகராட்சி சார்பில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கோவை மாநகராட்சியில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

கோவை மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் (NUHM), மாநகர நலச்சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் நகர திட்ட மேலாண்மை அலுவலகத்தில் அக்கவுண்ட் ஆபிசர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
அக்கவுண்ட் ஆபிசர் பணிக்கு பிகாம், எம்காம் முடித்து பணி சார்ந்து ஒரு ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓய்வு பெற்ற அரசு கணக்கு அலுவலர் மற்றும் ஓய்வு பெற்ற உதவி கணக்கு உதவியாளர்களும் விண்ணப்பம் செய்யலாம். டேட்டா என்ட்ரி பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மேலும் 2 பணிகளுக்கும் விண்ணப்பம் செய்வோர் தமிழ், ஆங்கிலத்தில் டைப் செய்யும் திறமை கொண்டிருக்க வேண்டும். அதோடு விண்ணப்பத்தாரர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி அக்கவுண்ட் ஆபிசர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணி என்பது தற்காலிகமானது தான்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூன் 26ம் தேதி (நாளை, திங்கட்கிழமை) நேர்க்காணலில் பங்கேற்கலாம். நேர்க்காணலுக்கு செல்வோர் கல்வி சான்றிதழ்கள் அசல், நகல், இருப்பிட சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, சாதி சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும். கொரோனா தடுப்பு பணிக்கான சான்று இருந்தாலும் கொண்டு செல்ல வேண்டும். ஏனென்றால் இந்த பணிக்கு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நேர்காணல் என்பது நாளை காலை 10 மணிக்கு கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பணிக்கான சம்பளம் என்பது என்ன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. ஆனாலும் தகுதி மற்றும் அரசு விதிகளின்படி நல்ல சம்பவளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
-
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications