சர்வேயர் வேலை! மொத்தமா 861 பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. விட்றாதீங்க
சென்னை: தமிழக அரசின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சர்வேயர், உதவி சோதனையாளர், உதவி பயிற்சி அலுவலர் என மொத்தம் 861 பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், வயது வரம்பு என்ன?, எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வபோது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வு நடத்தி பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

அந்த வகையில் தற்போது தமிழக அரசின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எந்தெந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: உதவி சோதனையாளர், உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து ஆங்கிலம்), திட்ட உதவியாளர், மோட்டார் வாகன ஆய்வாளர், வரைவாளர், விடுதி கண்காணிப்பாளர் & உடற்பயிற்சி அலுவலர், இளநிலை வரைவு தொழில் அலுவலர், இளநிலை தொழில் நுட்ப உதவியாளர், சிறப்பு பணி பார்வையாளர், சர்வேயர், தொழில் நுட்ப உதவியாளர் , உதவி வேளாண்மை அலுவலர் மேற்பார்வையாளர் நெசவு (04), தொழில் நுட்ப உதவியாளர் (தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம்) நில அளவர் என மொத்தம் 861 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: பணிக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். ஐடிஐ / டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். துறை சார்ந்த பிரிவில் தொழிற்கல்வி பாடப்பிரிவை எடுத்து படித்திருப்பது அவசியம். எடுத்துக்காட்டாக நில அளவர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சிவில் இன்ஜினியரிங்க் டிப்ளமோ அல்லது ஐடிஐ- பிரிவில் அளவை பிரிவில் தொழிற்பயிற்சி பெற்றவர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்து கொள்ளவும்.
வயது வரம்பு: மோட்டார் ஆய்வாளர் பணியை தவிர அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயதினை பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். மோட்டார் ஆய்வாளர் பணிக்கு மட்டும் 21 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 34 ஆகும். அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும்.
உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து ஆங்கிலம்) உள்ளிட்ட பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி?: தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்துக் கொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க வரும் 11.9.2024 கடைசி நாள் ஆகும். இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறும். முதல் தாள் தேர்வு வரும் 09.11.2024 அன்றும் இரண்டாம் தாள் தேர்வு 11/11/2024 - 14/11/2024 வரை நடைபெறும். தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை https://www.tnpsc.gov.in/Document/tamil/CTSE_DIP_Tamil_13.08.2024_.pdf கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications