கைநிறைய சம்பளம்.. 10ம் வகுப்பு முடித்தாலே போதும்.. நீலகிரியில் அரசு வேலை.. அழைக்கும் கார்டைட் ஆலை
நீலகிரி: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் கார்டைட் தொழிற்சாலை செயல்பட்டு வரும் நிலையில் அங்கு காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 10 ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து பணியை பெற முடியும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900 சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய ஆயுத தொழிற்சாலையின் கீழ் இந்தியாவில் கார்டைட் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் கார்டைட் தொழிற்சாலை உள்ளது. இங்கு மத்திய பாதுகாப்பு துறைக்கு தேவையான வெடிமருந்துகள் மற்றும் கார்டைட் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் தான் நீலகிரி மாவட்டம் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் ரசாயன செயல்முறைக்கான பணியாளர் (Chemical Process Worker) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 49 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் என்சிவிடி சார்பில் என்ஏசி/என்டிசி சான்று பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கு 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. வயது என்பது 2023 ஏப்ரல் மாதம் 1ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

இது ஒரு தற்காலிக பணியாகும். முதலில் ஒரு ஆண்டும், தேவையென்றால் அதிகபட்சமாக 4 ஆண்டு வரையும் பணியமர்த்தப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். மேலும் டிஏவும் வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து ஆப்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பங்களை The General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris District, Tamil Nadu PIn - 643 202 என்ற முகவரிக்கு மே மாதம் 14ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் டிரேட் தேர்வு( Trade Test)/ செய்முறை தேர்வு (Practical test) மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய Click Here
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications