மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. ஐடிஐ, டிகிரி முடிச்சவங்களுக்கு வாய்ப்பு.. பட்டைய கிளப்புங்க
சென்னை: ரூபாய் நோட்டுகள் அச்சிடும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர்வைசர், ஜூனியர் டெக்னீஷியன் என 534 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஐடிஐ, பிஎஸ்சி, பி.இ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இது குறித்த மேலும் விவரங்களை இங்கு காணலாம்.
மத்திய அரசின் முக்கிய நாணய மற்றும் கரன்சி அச்சிடும் நிறுவனங்களில் Currency Note Press Nashik ஒன்றாகும். இது (SPMCIL) நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் நகரில் அமைந்துள்ள இந்த நிறுவனம், இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் முக்கிய மையமாகும். நாட்டின் நாணய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு இந்நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

பணியிடங்கள் விவரம்:
தற்போது இந்த நிறுவனத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் டெக்னீஷியன், சூப்பர்வைசர், செக்ரடேரியல் அசிஸ்டென்ட், ஆர்டிஸ்ட், சேஃப்டி ஆபிசர் மற்றும் வெல்ஃபேர் ஆபிசர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 534 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வெல்ஃபேர் ஆபிசர் (02), சேஃப்டி ஆபிசர் (01), செக்ரடேரியல் அசிஸ்டென்ட் (01), ஆர்டிஸ்ட் (கிராஃபிக் டிசைன்) (01), ஜூனியர் ஆபிஸ் அசிஸ்டென்ட் (22). சூப்பர்வைசர் பிரிவில் பல்வேறு திறன்களுக்கும் சேர்த்து மொத்தம் 96 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜூனியர் டெக்னீஷியன் பிரிவில் அதிக எண்ணிக்கையிலான 430 காலியிடங்கள் உள்ளன. இதில் பிரிண்டிங் (108), கன்ட்ரோல் (227), எலக்ட்ரிக்கல் (12), எலக்ட்ரானிக்ஸ் (15), மெஷினிஸ்ட் (08), ஃபிட்டர் (20) மற்றும் மெக்கானிக் மெஷின் டூல் மெயின்டனன்ஸ் / ஃபிட்டர் (03) போன்ற பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
ITI, டிப்ளமோ, B.E/B.Tech, B.Sc மற்றும் முதுகலைப் பட்டம் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
செக்ரடேரியல் அசிஸ்டென்ட் (Level B-4) பதவிக்கு குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பு, கணினி அறிவு, ஆங்கிலம் அல்லது இந்தியில் 80 wpm சுருக்கெழுத்து மற்றும் 40 wpm தட்டச்சு வேகம் தேவை. ஆர்டிஸ்ட் (கிராஃபிக் டிசைன்) (Level B-4) பதவிக்கு 55% மதிப்பெண்களுடன் கிராஃபிக் டிசைன்/கம்மரிஷியல் ஆர்ட்ஸில் பேச்சுலர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்/விஷுவல் ஆர்ட்ஸ்/வோகேஷனல் (கிராஃபிக்ஸ்) பட்டம் வேண்டும்.
ஜூனியர் ஆபிஸ் அசிஸ்டென்ட் (Level B-3) பதவிக்கு எந்தத் துறையிலும் பட்டப் படிப்பு, கணினி அறிவு, அத்துடன் ஆங்கிலத்தில் 40 wpm அல்லது இந்தியில் 30 wpm தட்டச்சு வேகம் அவசியம். இப்பதவிகளுக்கான முழு தகுதி விவரங்களையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பில் காணலாம்.
வயது வரம்பு
வயது வரம்பானது 19.05.2026 அன்று தேதிப்படி கணக்கிடப்படும். Level A-2, P-2, S-1, A-1 நிலைப் பதவிகளுக்கு 18 முதல் 30 வயது வரையிலும், Level B-4, B-3 நிலைப் பதவிகளுக்கு 18 முதல் 28 வயது வரையிலும், Level W-3 நிலைப் பதவிகளுக்கு 18 முதல் 25 வயது வரையிலும் வயது இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி, உச்ச வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC (NCL) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு (PWD) பொதுப் பிரிவில் 10 ஆண்டுகளும், OBC பிரிவில் 13 ஆண்டுகளும், SC/ST பிரிவில் 15 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை
தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழித் தேர்வு (CBT) மற்றும் தட்டச்சுத் தேர்வு (டைப்பிங் டெஸ்ட்) நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு ₹200 ஆகும். மற்ற அனைத்து பிரிவினருக்கும் ₹1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
தேர்வு மையங்கள்
நாசிக், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி (NCR), போபால், இந்தூர், சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் தேர்வுகள் நடைபெறும். தேர்வானது வரும் ஜூன்/ஜூலை 2026 மாதங்களில் நடக்க வாய்ப்பு உள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 20, 2026 முதல் மே 19, 2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை கரன்சி நோட் பிரஸ் நாசிக் இணையதளத்தின் https://cnpnashik.spmcil.com/ என்ற முகவரியில் உள்ள 'கரியர்' பக்கத்தில் அணுகலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://cnpnashik.spmcil.com/wp-content/uploads/2026/04/Detailed-Advt.-for-Recruitment-of-Various-Posts-CNP.pdf
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications