ரூ.21000 ஊதியம்..குழந்தைகள் சேவை மையத்தில் வேலை! பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! இன்னும் 10 நாள் தான்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் சேவை மையங்கள் மற்றும் குழந்தை உதவி மேசை அலுவலகங்களுக்கு தற்காலிக அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் மேற்பார்வையாளர் மற்றும் வழக்கு பணியாளர் பணியிடங்கள் என மொத்தம் 7 காலியிடங்கள் உள்ளன. திண்டுக்கல்லைச் சேர்ந்த தகுதியான பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தின் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் குழந்தைகள் சேவை மையங்கள் மற்றும் குழந்தை உதவி மேசை (ஹெல்ப் டெஸ்க்) செயல்பட்டு வருகிறது
இவற்றின் மூலம் குழந்தைகள் நலன், பாதுகாப்பு, அவசர உதவி போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த உதவி மையங்களில் ஏழு காலி பணிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் ரயில் நிலைய குழந்தை உதவி மேசை அலுவலகம் மற்றும் பழனி பேருந்து நிலைய குழந்தை உதவி மேசை அலுவலகத்தில் இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

காலிப்பணியிட விவரம்:
1. மேற்பார்வையாளர் (Supervisor)
மொத்த காலியிடங்கள்: 4 (திண்டுக்கல் ரயில் நிலையம் - 3, பழனி பேருந்து நிலையம் - 1)
சம்பளம்: மாதம் ரூ.21,000
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், சமூகப் பணி (Social Work), கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், சமூக சமூகவியல், சமூகவியல் (Sociology) ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. வழக்கு பணியாளர் (Case Worker)
மொத்த காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: பிளஸ்-2 தேர்ச்சி.
வயது வரம்பு: அதிகபட்ச வயது: 42
இந்த வேலைகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்., சம்பளம், பொறுப்புகள், பணியின் தன்மை அனைத்தும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சேவை செயல்பாடுகளுக்கானவையாக இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
பிளசிங்ஸ், பிளாட் எண்.4,
2-ஆவது குறுக்குத் தெரு (மாடி),
எஸ்பிஆர் நகர்,
மாவட்ட ஆட்சியரகம் (அஞ்சல்),
திண்டுக்கல் - 624004
தொலைபேசி: 0451-2904070
விண்ணப்பத்துடன் தேவையான கல்விச் சான்றிதழ்கள், வயது ஆதாரம் மற்றும் முகவரி ஆதாரம் ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 24.11.2025
முழு விவரங்களும் www.dindigul.nic.in என்ற இணையதளத்தை காணலாம்..
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications