ஊர்க்காவல் படையில் வேலை.. உள்ளூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! திண்டுக்கல் காவல்துறை அறிவிப்பு!
திண்டுக்கல்: தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து ரோந்து மற்றும் சேவை பணிகளில் ஈடுபடுவதற்கு என்று ஊர்காவல் படை செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையிடம் இணைந்து பணியாற்ற ஊர்க்காவல் படையில் சேர்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," திண்டுக்கல் மாவட்ட காவல்துறையுடன் இணைந்து செயல்படும் ஊர்க்காவல் படையில் சேர்வதற்கு சேவை மனப்பான்மை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் (திண்டுக்கல் நகர், திண்டுக்கல் ஊரகம், பழனி மற்றும் கொடைக்கானல் காவல் உட்கோட்ட பகுதியில் வசிப்பவர்கள் மட்டும்) தேவை.

கல்வித் தகுதி :SSLC உயரம்: குறைந்தது 165செ.மீ இருக்க வேண்டும்.
வயது: 20.11.2025 அன்று 20 வயது பூர்த்தியடைந்தவராக வும்,45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
எவ்வித குற்ற வழக்கிலும் சம்பந்தப்படாதவராக இருக்க வேண்டும்.எந்த அரசியல் அமைப்புகளிலும் சாராதவர்களாகவும் இருப்பது அவசியம்.NCC மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பம் திண்டுக்கல் பூமார்கெட் அருகிலுள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் 20.11.2025 முதல் 24.11.2025 வரை ஐந்து நாட்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வழங்கப்படும். இவ்விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து (மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், ஆதார் கார்டு மற்றும் புகைப்படம் -2) 02.12.2025 அன்று மாலை 05 மணிக்குள் ஊர்க்காவல்படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
உடல்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் 05.12.2025-அன்று காலை 9.00 மணிக்கு நடைபெறும் உடல் தகுதி மற்றும் நேர்முகத்தர்விற்கு வரும்போது அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் ஆதார் அட்டை கொண்டுவர வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்ட்ட நபர்களுக்கு 45 நாட்கள் திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு ஊர்க்காவல் படையில் இணைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications