கனவு ஜாப்! தனித்தீவில் வருஷத்திற்கு 3 மாதம் மட்டும் வேலை.. ஜோடிகளுக்கு மட்டும் அனுமதி.. எங்கே தெரியுமா?
சென்னை: பூலோக சொர்க்கம் என நினைக்கும் அளவிற்கு சுற்றிலும் இயற்கை சூழல் நிறைந்த அயர்லாந்து தீவு ஒன்றில் வருஷத்திற்கு 3 மாதங்கள் மட்டும் வேலைக்கு ஆள் எடுக்கப்பட உள்ளது. கணவன் - மனைவி அல்லது ஏற்கனவே அறிமுகம் ஆன ஜோடிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வெறும் 2 பேர் மட்டுமே இந்ததீவில் வேலை செய்ய முடியுமாம். அப்படி என்னதான் இந்த தீவில் ஸ்பெஷல் என்பதை இங்கே பர்க்கலாம்.
எப்போதும் பரபரப்பாக வேலை செய்துவிட்டு.. வீட்டிற்கு வந்தவுடன் எங்காவது ஆள் நடமாட்டம் இல்லாத தீவுக்கு சென்று செட்டில் ஆகிவிடலாம் போல தோன்றுகிறது என சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம். சுற்றிலும் இயற்கை சூழந்த பகுதிகள் நிறைந்த வீடியோக்களை இன்ஸ்டா ரீல்ஸ்களில் பார்த்தால் கூட இப்படிப்பட்ட ஒரு இடத்தில் நமக்கு வேலையோ.. வீடோ இருந்தால் சொர்க்கத்தில் வாழ்வது போல இருக்கும் என நினைத்து பார்த்து இருப்போம்.

வருஷத்திற்கு 3 மாதம் மட்டுமே வேலை
அதுவும் இப்படியான பகுதிகளில் சம்பளத்துடன் ஒரு வேலையும் கிடைத்தால் எப்படி இருக்கும் என பகல் கனவு கண்டு இருக்கலாம். இதெல்லாம் கனவில் தான் நடக்கும் உண்மையில் எங்கே நடக்க போகிறது என கூட நினைத்த் இருக்கலாம். ஆனால் நிஜத்தில் அப்படியான ஒரு வேலை இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மையில் இதை நம்பித்தான் ஆக வேண்டும்.
கை நிறைய சம்பளத்துடன் வருஷத்திற்கு 3 மாதம் மட்டுமே வேலையுடன் சுற்றிலும் இயற்கை சூழ்ந்த ஒரு தீவில் வேலை இருக்கிறதாம். பூலோக சொர்க்கம் என நினைக்கும் அளவிற்கு உள்ள அந்த பசுமையான இடம் பற்றியும் அங்கு அப்படி என்னதான் வேலை என்பது குறித்த விவரங்களையும் பார்க்கலாம்.
கிஏட் பிளாஸ்கெட் தீவு
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தின் மேற்கு கடற்கரையில் உள்ள கெர்ரி கவுண்டியில் குட்டித்தீவு ஒன்று அமைந்துள்ளது. கிஏட் பிளாஸ்கெட் தீவு என்று அழைக்கப்படும் இந்த தீவு 1953 ஆம் ஆண்டு முதல் ஆள் நடமாட்டம் இல்லாமலே உள்ளது. இந்த தீவு சிறந்த சுற்றுலாததலமாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை இந்த தீவுக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. படகு மூலமாக இந்த தீவுக்கு சென்று விட்டு வரலாம். இயற்கையின் மொத்த அழகும் குவிந்து இருக்கும் இந்த தீவுக்கு சென்று வரும் சுற்றுலாப் பயணிகளை கவனித்துக்கொள்ள கேர்டேக்கர் பணிக்கு இரண்டு பேர் மட்டுமே நியமனம் செய்யப்படுகிறார்கள்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்
தொலைத்தொடர்பு, மின்சார வசதி என எதுவும் இருக்காது. கற்கால மனிதர்கள் போல ஒரு வாழ்க்கையை வாழும் அனுபவத்தை இந்த தீவு கொடுக்கும். இந்த தீவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கவும் தங்கவும் வசதி செய்து கொடுக்க வேண்டும். 2 பேர் மட்டுமே இந்த வேலைக்கு எடுக்கப்படுவார்கள்.
ஜோடிகளாகவோ அல்லது நண்பர்களாவோ இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இந்த பணியில் சேருபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் உணவு, தங்குமிடமும் இலவசம். சம்பளம் எவ்வளவு என்ற விவரங்கள் வெளியாகவில்லை. நடப்பு ஆண்டில் காமில் - ஜேம்ஸ் என்ற ஜோடி தங்கி இந்த வேலையை செய்து வருகிறது. இந்த பணிக்கு உலகம் முழுவதும் இருந்து யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்க முடியுமாம்.
ஜனவரியில் இந்த வேலைக்கான விண்ணப்ப பதிவு வெளியிடப்படும் என்று தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டதும் ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. இந்த ஆண்டுக்கு யாருக்கு அந்த அதிர்ஷ்டம் காத்து இருக்கிறதோ தெரியவில்லை என இப்போதே நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications