"வீட்டில் இருந்தே பார்ட் டைம் வேலை".. மாத சம்பளம் ரூ.65,000.. மாணவர்களை அழைக்கும் பிரபல ஐடி நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதம் ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் வீட்டில் இருந்தே பார்ட் டைம் முறையில் வேலை செய்ய பிரபல ஐடி நிறுவனம் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

EMA.. பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாக இது உள்ளது. இந்த நிறுவனம் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு கஸ்டமர் சப்போர்ட், டேட்டா ப்ரோபெஷனல், எம்பிளாய் அசிஸ்டென்ட், கம்பிளையன்ஸ் அனலிஸ்ட் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

it jobs jobs job

நம் நாட்டில் பெங்களூரில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது இஎம்ஏ நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

இஎம்ஏ நிறுவனத்தில் தற்போது AI resident பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது இன்டர்ன்ஷிப் வகை பணியாகும். இதனால் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அதுதொடர்புடைய துறையில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்.

‛‛வீட்டில் இருந்தே வேலை’’.. ஃபுல் டைம் + பார்ட் டைம் பணிக்கு அழைக்கும் அமேசான்! மிஸ் பண்ணாதீங்க


இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் 6 மாத கால அடிப்படையில் இன்டன்ஷிப் முறையில் நியமனம் செய்யப்பட உள்ளது. அதன்பிறகு சிறப்பாக பணியாற்றும் நபர்கள் இஎம்ஐ நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த பணியில் மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளது.

பொதுவாக இன்டர்ன்ஷிப் என்றால் குறிப்பிட்ட அந்த நிறுவனங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டும். அதேபோல் அவர்களுக்கான உதவித்தொகையும் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.65,000 Stipend வகையில் வழங்கப்படும். அதேபோல் ஒவ்வொருவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்.

மேலும் Summer காலத்தில் மாணவர்கள் முழு நேரமாக பணி செய் வேண்டி இருக்கும். அதேபோல் செமஸ்டர் காலத்தில் வாரத்தில் 20 முதல் 30 மணிநேரம் வேலை செய்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக EMA நிறுவனத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த அறிவிப்பு வந்து 2 வாரங்கள் ஆகிவிட்டதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+