அரசே அனுப்பிய பணம்! கணக்கிற்கு வந்த ரூ.3000.. பல லட்சம் பேருக்கு அடித்த லக்.. எப்படி பெறுவது?
சென்னை: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) கடந்த பிப்ரவரி மாதம் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 3000ல் இருந்து வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களைக் இந்த தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதமும் இந்த தொகை வழங்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு வருடமும்.. ஒவ்வொரு மாதமும் புதிதாக பணிக்கு சேரும் ஊழியர்களுக்கு அவர்களின் நிர்வாகம் சார்பாக EPFO கணக்கு தொடங்கப்படும். அந்த வகையில், EPFO இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கிட்டத்தட்ட 15 லட்சம் உறுப்பினர்களை புதிதாக சேர்த்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நடத்தும் பிஎப் கணக்கில் தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் இணைந்து வருகின்றனர்.

இதில் தொழில் உற்பத்தி துறையில் முதல்முறையாக பணிக்கு சேரும் ஊழியர்களின் முதல் வருங்கால வைப்பு நிதி சந்தாவை அரசே செலுத்தும்; அனைத்து துறைகளிலும் கூடுதலாக பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி சந்தாவில் ₹3000 அரசு செலுத்தும்.
இபிஎஃப்ஓவில் பதிவு செய்து முதல் முறையாக பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை மூன்று தவணைகளில் மத்திய அரசே அவர்களின் இபிஎஃப்ஓ கணக்கில் செலுத்தும். ₹15,000 வரை அதிகபட்சம் மத்திய அரசு செலுத்தும். இதற்கான தகுதி வரம்பு மாதத்திற்கு ₹1 லட்சம் சம்பளமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பிப்ரவரி மாதத்தில் இபிஎப்ஓவில் இணைந்த 15 லட்சம் உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 3000ல் இருந்து வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது அவர்களின் நேரடி வங்கி கணக்கிற்கு செல்லாமல் பிஎப் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
EPFOவில் மாற்றங்கள்
இனி EPFOவில் உள்ள பி.எஃப் பணத்தை எளிதாக ஏடிஎம் மூலம் எடுக்க முடியும். தற்போது உள்ள கடினமான முறையை பயன்படுத்த வேண்டியது இல்லை. இதற்கு பதிலாக எளிதாக ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியும்.
PAN 2.0 அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களில் மத்திய அரசு இப்போது EPFO 3.0 திட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது பிஎப் பணம் எடுப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். இது மாற்றப்பட உள்ளது. அதன்படி சந்தாதாரர்கள் நேரடியாக ஏடிஎம்கள் மூலம் பிஎஃப் தொகையை பெறும் வகையில் திட்டத்தை மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
ஏடிஎம்கள் மூலம் பிஎஃப் எடுப்பதற்கு வசதியாக கார்டுகளை வழங்கும் பணியிலும் தொழிலாளர் அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசதி மே-ஜூன் 2025க்குள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது EPFO சந்தாதாரர்களுக்கு மேலும் வசதியை அளிக்கும்.அந்த கார்டுகளை ஏடிஎம் கார்டுகள் போல பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். அந்த கார்டுகள் உங்கள் போன் மற்றும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்புகளில் தற்போது 12 சதவீத வரம்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த வரம்பு தற்போது நீக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தனிப்பட்ட வகையில் சொந்தமாக சேமிப்பு பழக்கங்கள் இருக்கும். அந்த பழக்கங்களை அடிப்படையாக வைத்து வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்பு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்பு உயர்த்திக்கொள்ளலாம். தற்போது 1800 ரூபாய் கொடுப்பவர்கள் தேவைப்பட்டால் கூடுதலாக கொடுக்கலாம். அதாவது பிஎப் தொகைக்கு நீங்கள் கூடுதலாக பணம் கட்டலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications