1,930 காலியிடம்.. மாதம் ரூ.42,300 முதல் ரூ.63,300 வரை சம்பளத்தில் சூப்பர் வேலை.. அழைக்கும் இஎஸ்ஐசி
சென்னை: மத்திய அரசின் தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் (இஎஸ்ஐசி) காலியாக உள்ள 1,930 காலியடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.42,300 முதல் ரூ.63,300 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் கட்டுப்பாட்டில் இஎஸ்ஐசி எனும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (ESIC or Employees State Insurance Corporation) செயல்பட்டு வருகிறது.

இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகளுடன் நிரப்பபப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: இஎஸ்ஐசி நிறுவனத்தில் தற்போது நர்சிங் ஆபிசர் (Nursing Officer) பணிக்கு 1,930 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இடஒதுக்கீடு அடிப்படையில் பார்த்தால் பொதுப்பிரிவினர் 892 பேர், இடபிள்யூஎஸ் பிரிவினர் 193 பேர், ஓபிசி பிரிவினர் 446 பேர், எஸ்சி பிரிவினர் 235 பேர், எஸ்டி பிரிவினர் 164 பேர், பிடபிள்யூபிடி பிரிவினர் 168 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி பிற பிரிவினருக்கு வயது தளர்வு அளிக்கப்படும். அதன்படி ஓபிசி பிரிவினர் 33 வயது வரையும், எஸ்டி, எஸ்டி பிரிவினர் 35 வயது வரையும், பிடபிள்யூபிடி பிரிவினர் 40 வயது வரையும் விண்ணப்பம் செய்யலாம்.
கல்வி தகுதி: மாத சம்பளம்: பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்மெ் படிப்பை படித்து ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.42,300 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ரூ.63,300 வரை சம்பளம் என்பது வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மார்ச் மாதம் 7 ம் தேதி முதல் மார்ச் மாதம் 27 ம் தேதி மாலை 6 மணிக்குள் ESI இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் த் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மெடிக்கல் எக்ஸாம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
https://drive.google.com/file/d/1iBvqoSKFgMC5NryeZO02V8FLtAiOOTCE/view?usp=sharing
-
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications