டிகிரி போதும் + ரூ.4 லட்சம் வரை சம்பளம்.. அழைக்கும் பிரபல ஐடி நிறுவனம்! சென்னையிலேயே பணி
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
சென்னையில் பல ஐடி நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் EXL. இந்த நிறுவனம் என்பது வங்கி, நிதி சேவை, சுகாதாரம், சில்லறை வணிகம் உள்ளிட்ட துறைகளுக்கு டேட்டா சர்வீஸ்களை வழங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
EXL நிறுவனத்தில் தற்போது எக்ஸிக்கியூட்டிவ் (Executives) பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நல்ல கம்யூனிகேசன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். Excel ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். பிரச்சனையை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
ஆடிட் செய்ய வேண்டும். மேலும் குவாலிட்டி மற்றும் ப்ரோடக்சன் டார்கெட்டை முழுமையாக முடிக்க வேண்டும். மேலும் மேனேஜரிடம் இருந்து வரும் இ-மெயில்களுக்கு உடனடியாக ரிப்ளை கொடுக்க வேண்டும். HIPAA, OIG-ல் சேர்ந்து செயல்பட வேண்டியிருக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை ஆண்டு சம்பளம் வழங்கப்படும். அதன்படி பார்த்தால் மாதசம்பளம் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம், அதிகபட்சம் என்றால் ரூ.33.333 வரை வழங்கப்பட உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் EXL நிறுவனத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பத்துக்கான கடைசி தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள இஎக்ஸ்எல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணி குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications