வனத்துறையில் வேலை.. நாகப்பட்டினத்தில் பணி.. எழுத்துத் தேர்வு கிடையாது.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: நாகப்பட்டினம் வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் (தற்காலிக) நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி, என்ன தகுதி உள்ளிட்டவற்றை கீழே காணலாம்.
தமிழ்நாடு வனத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் மாவட்டங்கள் வாரியாக நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது நாகப்பட்டினம் வனக்கோட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. காலிப்பணியிடங்கள் மற்றும் தகுதி குறித்த விவரங்களை கீழே காணலாம்.
டெக்னிக்கல் அசிஸ்டண்ட் மற்றும் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் என 2 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. இதில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள், பிஎஸ்சி வனவியல்/வேளாண்மை அல்லது எம்எஸ்சி வனவிலங்கு உயிரியல், லைப் சயின்ஸ், தாவரவியல், விலங்கியல், நேச்சுரல் சயின்ஸ் அல்லது அதற்கு இணையான 2 ஆண்டு அனுபவம் கொண்ட கள ஆராய்ச்சி செய்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அல்லது எம்சிஏ அல்லது அதற்கு சமமான எம்ஐஎஸ்/ஜிஐஎஸ் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதுதவிர தமிழ்நாடு வனத்துறையின் பணியாளர்கள் தர ஊதியம் ரூ.4,800 மற்றும் அதற்கு மேலான அனுபவத்துடன் ஒய்வு பெற்றவர்களும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள், ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். இல்லையெனில் டிப்ளமோ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து இருக்க வேண்டும்.
பட்டம்/டிப்ளமோ படிப்புடன் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பயன்பாடுகளில் சான்றிதழுடன் முடித்து 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அல்லது தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பிரிவில் சான்று பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூன் மாதம் 25ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை ‛‛வன உயிரின காப்பாளர் அலுவலகம், நாகப்பட்டின வன உயிரின கோட்டம், நாகப்பட்டினம்-611001 தொலைபேசி எண் 04365 - 253092, என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்போதைய இந்த அறிவிப்பின் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவரும், டேட்டா என்டரி ஆபரேட்டர் பணிக்கும் ஒருவர் என மொத்தம் 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு தற்காலிக பணியாகும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications