தென்காசியில் அரசு வேலை.. மாதம் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம்.. 8 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்!
சென்னை: தென்காசியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள (வாட்ச்மேன்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு மாத சம்பளம் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படும்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள (வாட்ச்மேன்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி மற்றும் சம்பளம் விவரம் போன்ற தகவல்களை இங்கே பார்க்கலாம்.

கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். GT-GL- முன்னுரிமை, கொரோனா தொற்றினாலோ அல்லது பிற காரணங்களாலோ பெற்றோர் இருவரையும் இழந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சம்பளம் எவ்வளவு? குரூப் -டி லெவல் அடிப்படையில் மாதம் ரூ. 15,700 முதல் ரூ. 50 ஆயிரம் வரை வழங்கப்படும். நேர்காணல் முறையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயது வரம்பு: இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் வயது 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது 32 க்கு மிகாமல் இருக்க வேண்டும். எனினும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோருக்கு வயது வரம்பில் 2 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது 34 வயது வரை விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 ஆகும்.
விண்ணப்பிப்பது எப்படி? மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். வரும் 14.09.2023 ஆம் தேதி வரை அரசு வேலை நாட்களில் விண்ணப்பங்களை பெற்று முழுமையாக பூர்த்தி செய்து தபால் மூலமாகவோ, நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி ஆவணங்கள், சாதிச்சான்று, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் கொரோனா தொற்று அல்லது பிறகாரணங்களால் பெற்றோரை இழந்ததற்கான சான்று ஆகியவற்றின் நகலையும் விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், எபனேசர் டைல்ஸ் ஷோரூம் பின்புறத்தில், வார்டு எண்-5, கதவு எண் 168/23/24 முகமதியா நகர், குத்துக்கல்வலசை அஞ்சல், தென்காசி -627803 என்ற முகவரிக்க்கு அனுப்ப வேண்டும்.
-
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications