தமிழக இளைஞர்களே, மத்திய அரசு அதிகாரிகளாக விருப்பமா? மிக அருமையான வாய்ப்பு.. 7500 பணியிடங்கள்
டெல்லி: மத்திய அரசில் வருமான வரித்துறை, சுங்கவரித்துறை,CBI,IB,NIA,CBDT, வெளியுறவுத்துறை ,ரயில்வே துறை போன்ற துறைகளில் அதிகாரியாக விரும்புவோருக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. மொத்தம் மத்திய அரசு துறையில் 7500 காலிப் பணியிடங்கள் இருக்கிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"Combined Graduate Level Examination, 2023 " ஐ ssc.nic.in இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 3ம் தேதி தொடங்கி மே 3ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி வழியாக நடக்கும் tier 1 தேர்வு ஜூலையில் நடைபெறும் என்றும், tier II தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஒருங்கிணைந்த பட்டதாரிகளுக்காக நடத்தும் வெவ்வேறு குரூப் 'பி' மற்றும் குரூப் 'சி' பதவிகளை நிரப்புவதற்கான நிலைத் தேர்வு, 2023க்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சகங்கள்/ துறைகள்/ அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியலமைப்புஅமைப்புகள்/ சட்டப்பூர்வ அமைப்புகள்/ தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

என்னென்ன
உதவி தணிக்கை அலுவலர், உதவி கணக்கு அதிகாரி, உதவி பிரிவு அலுவலர்(சென்டரல் செக்ரட்ரியேட் சர்வீஸ்), உதவி பிரிவு அலுவலர்(இன்டலிஜனஸ் பிரோ) , உதவி பிரிவு அலுவலர்( ரயில்வே அமைச்சகம்), உதவி பிரிவு அலுவலர்(வெளியுறவுத்துறை), உதவி பிரிவு அலுவலர் (ஏஎப்ஹெச்ஓ), உதவி பிரிவு அலுவலர்( மத்திய தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சகம்), உதவி பிரிவு அலுவலர் ( மத்திய அமைச்சரவை) , Inspector of Income Tax ( வருமான வரித்துறை), Inspector, (Central Excise) ( சுங்கத்துறை), Inspector (Preventive Officer), Inspector (Examiner) (சுங்கத்துறை),
Assistant Enforcement Officer (Directorate of Enforcement), Sub Inspector (சிபிஐ), Inspector Posts (அஞ்சலகம்), Inspector (Central Bureau of
Narcotics, Ministry of Finance) உள்பட மொத்தம் 36 துறைகளில் காலியாக உள்ள 7500 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது தகுதி
பணியிடங்கள் அனைத்துக்கும் அடிப்படையில் ஏதேனும் ஒரு டிகிரி படிப்பு தான் கல்வி தகுதி உள்ளது. இருப்பினும் சில பதவிகளுக்கு கணிதம் இருக்கும். சில பதவிகளுக்கு அக்கவுண்டன்சி இருக்கும்.தெளிவாக நோட்டிபிகேசனை பாருங்கள் .வயது தகுதியும் உள்ளது.பொதுவாக குரூப் பி பணியிடங்களுக்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியும். ஓபிசிக்கு 3 வருடமும், எஸ்சிஎஸ்டிக்கு 5 வருடமும் வயது சலுகை உள்ளது. இதேபோல் குருப் சி பணியிடங்களுக்கு 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓபிசிக்கு 3 வருடமும், எஸ்சிஎஸ்டிக்கு 5 வருடமும் வயது சலுகை உள்ளது.

சம்பளம் எப்படி
சம்பளம் லெவல் 4, லெவல் 5 என்கிற இரு அடிப்படையில் இருக்கும்.அதாவது, லெவல் 5 இல் 29200 ரூபாய் முதல் 92300 வரை இருக்கும். லெவல் 4 இல், 25500 ரூபாயில் இருந்து 81100 ரூபாய் வரையிலும் சம்பளம் இருக்கும்.

ஆன்லைன் விண்ணப்பம்
ssc.nic.in இணையதளத்தில் முழு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 3ம் தேதி தொடங்கி மே 3ம் தேதி வரை ssc.nic.in தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி வழியாக நடக்கும் tier 1 தேர்வு ஜூலையில் நடைபெறும் என்றும், tier II தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் https://ssc.nic.in. தளத்தை தவிர வேறு எந்த தளத்திலும் வரும் தகவல்களை எந்த காரணம் கொண்டு நம்பி விட வேண்டாம். அதேபோல் https://ssc.nic.in. தளத்தை தவிர வேறு எதிலும் விண்ணப்பிக்க வேண்டாம்.

அறிவுரை
ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் நேரம் 03-05-2023 (23:00). விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த நலனுக்காக முன்பே ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதித் தேதிக்கு முன்பே மற்றும் கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம். ஏனெனில் SSC இணையதளத்தில் துண்டிக்கப்படுதல்/ இயலாமை அல்லது உள்நுழைவதில் தோல்வி சாத்தியம் இல்லாமல் போகுதல் போன்றவை இறுதிநேரத்தில் ஏற்படலாம் என்பதால் அதற்கு தேர்வாணையம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

அருமையான வாய்ப்பு
விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும். பெண்கள் மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் சரிபார்க்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் அவர்கள் சரியான விவரங்களை பூர்த்தி செய்திருப்பதற்கான பிரிவியூ/பிரிண்ட் ஆப்சன் கொடுத்து பாருங்கள். சரியான தகவல் நிரப்பி இருக்கிறோமா என்பதை உறுதி செய்துவிட்டு சமர்பியுங்கள். பொதுவாக மத்திய அரசு பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சேருவது இல்லை என்ற குறை சமீபகாலமாக உள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்து அதிக அளவு தமிழக இளைஞர்கள் மத்திய அரசு பணிகளில் சேர வேண்டும். இந்த தகவல்களை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிருங்கள். வேலைவாய்ப்பு குறித்து முழு விவரம் இந்த செய்தியின் கடைசியில் இணைக்கப்பட்டுள்ளது-
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications