டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுத தயாராகும் தேர்வர்களுக்கு தேனி கலெக்டர் குட்நியூஸ்
தேனி: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஜூன் 15-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான முழுமாதிரி தேர்வுகள் வரும் ஜூன் 3-ந்தேதி, 7-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அறிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

மொத்தம் 70 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு ஏப்ரல் முதல், ஏப்ரல் 30-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மே 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
அடுத்ததாக குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்த பலர் மும்முரமாக படித்து வருகிறார்கள். பலர் மாதிரி தேர்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அவர்களுக்காகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசே மாதிரி தேர்வுகளையும், பயிற்சி வகுப்புகளையும் நடத்துவது வழக்கம். அந்த வகையில், தேனி மாவட்டத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற போகிறது.
தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில்," தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு அடுத்த மாதம் (ஜூன்) 15-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான முழுமாதிரி தேர்வுகள் வருகிற 3-ந்தேதி, 7-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி. தரத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின் விண்ணப்ப நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயரை 6379268661 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்" இவ்வாறு தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications