மதுரையில் ஐடி வேலை.. அழைக்கும் HCL நிறுவனம்.. காலியிடங்கள் எத்தனை தெரியுமா? சூப்பர் சான்ஸ்
மதுரை: எச்சிஎல் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைபிரிட் முறையில் வாரத்தில் 2 நாட்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணி செய்யலாம்.
HCL Tech.. சுருக்கமாக எச்சிஎல் என அழைக்கப்படும் இந்த நிறுவனம் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மொத்தம் 60 நாடுகளில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த நிறுவனம் என்பது சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்படுகிறது.

இந்நிலையில் தான் தற்போது மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி எச்சிஎல் நிறுவனத்தில் லீட் ஜாவா டெவலப்பர் (Lead Java Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணி என்பது முன்அனுபவம் உள்ளவர்களுக்கானது. இதனால் குறிப்பிட்ட துறையில் 5 முதல் 9 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு ஜாவா புரோகிராமிங் (JAVA Programming), ஸ்பிரிங் (Spring), ஸ்பிரிங் பூட் (Spring Boot), ரெஸ்ட் ஏபிஐ (REST API), மைக்ரோ சர்வீசஸ் (Microservices) உள்ளிட்டவற்றை பற்றிய நல்ல அறிவு மற்றும் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு செகண்டரி ஸ்கில்ஸ்ஸாக விண்ணப்பம் செய்வோர் NodeJS, Azure, Angular தெரிந்து வைத்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி லீட் ஜாவா டெவலப்பர் பணிக்கு மொத்தம் 10 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தற்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படலாம். பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் எச்சிஎல் நிறுவனத்தின் லிங்க்ட்இன் பக்கத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
பணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications