Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் காலியிடங்கள்.. வேலை தேடுவோருக்கு வந்தாச்சு அறிவிப்பு.. செம

Subscribe to Oneindia Tamil

மதுரை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, மதுரையில் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

hcl-hiring-for-java-full-stack-developer-roles-in-madurai

தற்போதைய அறிவிப்பின்படி ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Java Full Stack Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதி வேண்டும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

Backend

* பேக்எண்ட் பிரிவில் ஜாவா (கோர் ஜாவா, ஓஓபி கான்செப்ட்) தெரிந்திருக்க வேண்டும்.
* ஸ்பிரிங், ஸ்பிரிங்புட், Hibernate/JPA உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

* Rest APIsல டெவலப்பிங்கில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

* மைக்ரோசர்வீசஸ் ஆர்க்கிடெக்சரில் நல்ல அறிவை பெற்றிருக்க வேண்டும்.
* J2EE கான்செப்ட்ஸ் பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.

Frontend

* Angular/React/Vue.js உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
* HTML5, CSS3, JavaScript, TypeScript உள்ளிட்டவற்றில் நல்ல அறிவு கொண்டிருக்க வேண்டும்.
* Building responsive UI மற்றும் Crossbrowser Compatibility தெரிந்திருக்க வேண்டும்.

Database & Tools

* SQL டேட்டாபேசஸ் (MySQL, PostgreSQL, Oracle) உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

* NoSQL databases (MongoDB, Cassandra Optional) தெரிந்திருக்க வேண்டும்.
* Git, Maven/Gradle தெரிந்திருக்க வேண்டும்.
* CI/CD tools (Jenkins, GitHub Actions, Azure DevOps - plus) தெரிந்திருக்க வேண்டும்.

அனுபவம் தேவை

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 12 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்டும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.

மதுரையில் நியமனம்

அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசிதேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+