மதுரையிலேயே ஐடி வேலை.. எச்சிஎல் தரும் சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க
மதுரை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு முக்கிய நிறுவனங்களில் எச்சிஎல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை, மதுரையில் எச்சிஎல் ஐடி நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் மதுரையில் உள்ள எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விவரம் வருமாறு:
எச்சிஎல் சார்பில் தற்போது புராடெக்சன் சப்போர்ட் புரோபஷனல் (Production Support Professionals) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஆரக்கல் பிஎல்எஸ்க்யூஎல் (Oracle PLSQL), யுனிக்ஸ் செல் ஸ்கிரிப்டிங் (Unix Shell Scripting), ஐடிஐஎல் (ITIL) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் புராடெக்சன் சப்போர்ட் பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
இந்த பணிக்கான இண்டர்வியூ மதுரையில் நடைபெற உள்ளது. Face to Face முறையில் இண்டர்வியூ இருக்கும். இண்டர்வியூவுக்கான தேதி, விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. விண்ணப்பம் செய்வோருக்கு அதுபற்றிய விவரங்கள் இ-மெயில் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலமாக தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான அறிவிப்பு வெளியாகி 2 வாரங்கள் ஆகிவிட்டது.
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். எனவே விரைந்து விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications