சென்னையில் ஐடி வேலை.. பிகாம் உள்பட டிகிரி முடித்தோருக்கு ஜாக்பாட்.. நாளை - நாளை மறுநாள் இண்டர்வியூ
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பிகாம் உள்பட ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கான இண்டர்வியூ நாளை (ஏப்ரல் 7 ) மற்றும் நாளை மறுநாள் (ஏப்ரல் 8) சென்னையில் நடைபெற உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் (HCL or HCL Technologies) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி எச்சிஎல் நிறுவனத்தில் Process Associate - Freshers பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 2024ம் ஆண்டில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காமர்ஸ், பைனான்ஸ் பிரிவில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. அதேவேளையில் பிடெக், எம்டெக் உள்ளிட்ட இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் என்பது வேண்டும். அதன்படி Banking Products பற்றிய அடிப்படை விஷயத்தை தெரிந்திருக்க வேண்டும். டைப்பிங் ஸ்கில்ஸ் நன்றாக இருக்க வேண்டும். நிமிடத்துக்கு 30 வார்த்தைகள் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
எம்எஸ் ஆபிஸில் Word, Excel உள்பட பிற விஷயங்கள் அனைத்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். புதிய டெக்னாலஜியை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். மேலும்நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். அதேபோல் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக UK Shift-ல் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
குறிப்பாக உடனடியாக பணியில் சேர தயாராக இருக்க வேண்டும். அதாவது இன்னொரு நிறுவனத்தில் பணியாற்றி வருவோர் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கு பணிக்கு தேர்வாகும்போது குறுகிய காலத்தில் பணியில் இணைய தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது சென்னையில் ஏப்ரல் 7 (நாளை), ஏப்ரல் 8 (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. இந்த 2 நாட்களும் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை இண்டர்வியூ நடைபெறும். இண்டர்வியூ என்பது 8, South Phase, MTH Road, AmbatturIndustrial Estate, Ambattur, Chennai - 600058 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Geat in the industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது மாதசம்பளம் பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஊழியர்களுக்கு 30 கிலோமீட்டர் சுற்றளவில் Two Ways Cabs வசதி என்பது உள்ளது. பெண் ஊழியர்களுக்கு Cab வசதி இலவசமாகும்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications