வீட்டில் இருந்தே வேலை.. போன் பேச தெரிந்தாலே போதும்.. எச்சிஎல் ஐடி நிறுவனம் சூப்பர் சான்ஸ்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது Work From Home பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது கஸ்டமர் சப்போர்ட் எக்ஸிக்கியூட்டிவ் - வாய்ஸ் புராசஸ்(Customer Support Executive - Voice Process) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Interpersonal மற்றும் Soft Skills இருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு கஸ்டமர் சப்போர்ட் ரோலில் ஓராண்டு பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். இதுதவிர இரவு பணி உள்பட ரோட்டேஷனல் ஷிப்ட்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். கூடுதல் மொழி தெரிந்திருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும்.
அதேபோல் Voice Based Customer Support ரோலில் பணியாற்றி இருப்போருக்கு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணிஅனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
சென்னை எச்சிஎல் நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருக்கும் இ-மெயில் முகவரிக்கு உடனடியாக ரெஸ்யூமை அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications