மதுரையில் ஐடி வேலை.. HCL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உடனே விண்ணப்பம் செய்யுங்க
சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் நிறுவனத்தில் டாட்நெட் டெவலப்பர் (.NET Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு .NET Core, C# உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும்.

அதேபோல் Docker அல்லது Kubernetes உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். எஸ்க்யூஎல் (Queries, Optimization, Stored Procedures) உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆப்ஜெக்ட் ஒரியண்டட் புரோகிராமிங் மற்றும் டிசைன் பேர்ட்டன் உள்ளிட்டவற்றில் நல்ல புரிதல் இருக்க வேண்டும். அதேபோல் RESTful APIs மற்றும் மைக்ரோசர்வீசஸ் ஆர்க்கிடெக்ச்சர் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.
மேலும் BitBucket (Version Control, Branching Strategies), CI/CD பைப்லைன்ஸ், ஜென்கின்ஸ் , Agile/Scrum மெத்தடாலஜிஸ் உள்ளிட்டவை தெரிந்திருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட டாட்நெட் டெவலப்பர் பிரிவில் குறைந்தபட்சம் 7 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். மதுரையில் எச்சிஎல் நிறுவனம் மாட்டுத்தாவணியில் 120அடி ரோட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்த பணிக்கான மாதசம்பளம் குறித்த விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தற்போது அறிவிப்பு வெளியாகி 3 நாட்கள் கடந்துவிட்டது. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications