அனுபவம் வேண்டவே வேண்டாம்.. சென்னை எச்சிஎல்-லில் காத்திருக்கும் சூப்பர் வேலை.. ரெடியா?
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு முன்அனுபவம் வேண்டாம். பிகாம், எம்பிஏ, பிபிஏ, எம்காம் உள்பட ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் Process Associate / Customer service representative ( Voice Process) பிரிவில் காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு அனுபவம் எதுவும் வேண்டாம். ஒருவேளை ஓராண்டு அனுபவம் இருந்தால் அவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் அவர்களிடம் அதற்கான சான்று இருக்க வேண்டும். அதேவேளையில் அனுபவம் இல்லாதவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும்.
அதன்படி விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். குறிப்பாக பிபிஏ, பிகாம், எம்பிஏ, எம்ஏ, எம்காம் உள்ளிட்ட படிப்புகளை 2025ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மாறாக பிஇ, பிடெக், எம்எஸ்சி ஐடி - இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் இண்டர்வியூவுக்கான தேதியும் தெரிவிக்கப்படவில்லை.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக அல்லது அதில் உள்ள இ-மெயில் முகவரிக்கு ரெஸ்யூம் அனுப்பி விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications