+2 போதும் + அனுபவம் வேண்டாம்.. நாளை, நாளை மறுநாள் சென்னையில் இண்டர்வியூ.. நல்லசம்பளத்தில் HCL வேலை
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பிளஸ் 2 அல்லது 2024ல் டிகிரி முடித்து அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்து நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ள இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.2.8 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் முன்னணியில் உள்ள ஐடி நிறுவனங்களில் ஒன்று எச்சிஎல். அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் எச்சிஎல் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பொதுவாக எச்சிஎல் போன்ற நிறுவனங்களில் பிளஸ் 2 படித்தவர்களுக்கு வாய்ப்பு என்பது கிடைக்காது. ஆனால் இப்போது கஸ்டமர் சப்போர்ட் ரோலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் International Voice Freshers for Banking Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு கஸ்டமர் சப்போர்ட் ரோலாகும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும் அல்லது பிளஸ் 2 படிப்பை கட்டாயம் முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
ZOHO-வின் புதிய வேலைவாய்ப்பு.. அக்கவுண்ட் மேனேஜர் பணிகளுக்கு விண்ணப்பிக்க ரெடியா? சென்னையில் பணி
பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். கண்டிப்பாக பேங்கிங், இன்டர்நேஷனல் பேங்கிங் பற்றிய புரிதல் இருக்க வேண்டும் . மேலும் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர். பணியாளர்களுக்கு Cab வசதி உள்ளது. வீட்டில் இருந்து பணியாளர்கள் Cab மூலம் பணிக்கு சென்று வரலாம்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.2.8 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக எச்சிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்து நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வாரம் 5 நாட்கள் மட்டுமே பணியாகும்.
சென்னையிலேயே பணி.. பிரபல ஐடி நிறுவனம் தரும் அசத்தலான வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க
இண்டர்வியூ என்பது நாளை, நாளை மறுநாள் (ஆகஸ்ட் 22, 23) மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டவியூவில் பங்கேற்க செல்வோர் முன்கூட்டியே செல்வது நல்லதாகும். இண்டர்வியூ செல்லும்போது Resume, ஆதார் கார்டு அல்லது வேறு ஏதாவது ஒரு ஐடி கார்டு, கல்வி சான்றிதழ் உள்பட தேவையான சான்றிதழ்களை எடுத்து செல்ல வேண்டும். இண்டர்வியூ என்பது HCL Technologies- AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Rd, Ambattur, Chennai, Tamil Nadu 60005 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications