HCL வேலைவாய்ப்பு.. சோழிங்கநல்லூரியில் நாளை இண்டர்வியூ.. சென்னையிலேயே பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேவைாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நாளை (நவம்பர் 9) சென்னை சோழிங்கநல்லூரில் இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது.

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

it jobs job jobs

எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது TRPM/3PRM Analyst பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு என்று குறிப்பிட்ட கல்வி தகுதி எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. அதேவேளையில் விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விண்ணப்பம் செய்வோருக்கு TRPM/3PRM பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும்.அதேபோல் Vendor Risk Management, Entity Onboarding, Entity Screening, SOC2, SOC3, Risk Evaluation, Hippa Regulation உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவில் அதுபற்றி தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது நவம்பர் 9 ம் தேதி காலை 11 மணி முதல் 2 மணி வரை சென்னையில் நடைபெற உள்ளது.

டவர் 5 , எச்சிஎல் டெக், எல்காட் எஸ்இஇசட், சோழிங்கநல்லூர், சென்னை என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இண்டர்வியூ காலை 11 மணிக்கு என்பதால் சற்று நேரத்துக்கு முன்கூட்டியே திட்டமிட்டு உரிய சான்றிதழ்களுடன் செல்வதன் மூலம் கடைசி கட்ட பரபரப்பில் இருந்து தப்பிக்க முடியும்.

பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+