அரியர்ஸ் இருந்தாலும் கவலைப்படாதீங்க.. வேலை தர தயாரான HCL.. நவ.,13 - 14 ல் சென்னையில் இண்டர்வியூ
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல்-லில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் அரியர்ஸ் இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. இதற்கான இண்டர்வியூ நவம்பர் 13 (நாளை) மற்றும் நவம்பர் 14 (நாளை மறுநாள்) என 2 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஐடி நிறுவனங்களும் குறைந்தபட்சம் இன்ஜினியரிங் அல்லது டிகிரி படிப்பை முடித்தவர்களை தான் வேலைக்கு எடுக்கிறது. ஆனால் எச்சிஎல் நிறுவனம் அரியர்ஸ் வைத்து டிகிரி முடிக்காமல் இருந்தாலும் உரிய தகுதி இருந்தால் வேலை வழங்கி வருகிறது.

அந்த வகையில் தான் தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் புராசஸ் அசோசியேட் (Process Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி அல்லது பட்டமேற்படிப்பு முடித்திருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பை பொறுத்தமட்டில் 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்பை முடித்தவர்களும் பங்கேற்கலாம். அரியர்ஸ் இருந்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கும் பணிக்கான தகுதி இருப்பின் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
அதேபோல் அனுபவம் தேவையில்லை. மாறாக ஓராண்டு வரை பணி அனுபவம் கொண்டிருப்பவர்கள் என்றால் அதற்கான உரிய ஆவணங்களுடன் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிப்ட் என்பது ரோட்டோஷனல் முறையில் இருக்கும். இதனால் இரவு பணி செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Cab வசதி உள்ளது. அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும், வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும் வாகனத்தில் பிக்-அப் மற்றும் டிராப் வசதி உள்ளது. இன்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலமாக பயிற்சி வழங்கப்படும். தற்போதைய அறிவிப்பில் சம்பளம் குறித்து Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (நவம்பர் 13), நாளை மறுநாள்(நவம்பர் 14) என 2 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் லேப்டாப் எடுத்து செல்ல கூடாது. இண்டர்வியூ No 602/3/138, Elcot Economic Zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur, Chennai 600 119 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
Face to Face முறையில் இண்டர்வியூ இருக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி இருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து நேரடியாக நாளை, நாளை மறுநாள் என 2 நாட்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications