‛ரூ.3 லட்சம் சம்பளம்’.. சென்னை பிரபல ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. நாளை காலை 11 மணி வரை ‛டைம்’

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, மும்பை, புனேவில் பணியமர்த்தப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு நாளை (ஜுன் 25)காலை 11 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஹெக்சாவர் டெக்னாலஜிஸ் லிமிடெட் (Hexaware Technologies Limited) எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சுருக்கமாக ஹெக்சாவர் (Hexaware) என அழைக்கின்றனர்.

it jobs job

இந்த நிறுவனத்தின் கிளைகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ளது. இந்நிலையில் தான் சென்னை, மும்பை, புனேவில் செயல்பட்டு வரும் ஹெக்சாவர் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.

இந்த நிறுவனத்தில் தற்போது கஸ்டமர் (Customer)/ டெக்னீக்கல் சப்போர்ட் (Technical Support) மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி (Information Technology) பிரிவில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் முதலில் டிரெய்னியாக எடுத்து கொள்ளப்படுவார்கள். அதன்பிறகு அவர்களுக்கு சம்பந்ததப்பட்ட பிரிவில் பணி நியமனம் செய்யப்படும்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஎஸ்சி பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், சர்க்கியூட்டல் மற்றும் பிசிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். 2024ம் ஆண்டு படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இப்படி விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் ஐடிஐஎல் (ITIL) ப்ராசஸ் மற்றும் இன்டர்நேஷனல் அளவில் வாடிக்கையாளர்களிடம் போன் அல்லது இ-மெயிலில் தொடர்பு கொள்ள தெரிந்திருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸ், அன்டிவைரஸ் சாப்ட்வேர், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உள்ளிட்டவை பற்றி அறிந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி 24 X 7 என்ற அடிப்படையில் பணியாற்ற விருப்பம் இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.3 லட்சம் வழங்கப்பட உள்ளது. ஆனால் டிரெய்னி காலத்தில் முதல் 3 மாதத்துக்கு மாதம் ரூ.15 ஆயிரம் மட்டுமே ஸ்டைபென்ட்டாக வழங்கப்படும். ஆனால் இதில் இன்னொரு கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 2 ஆண்டுக்கான Bond நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஒருவேளை இந்த Bond முறையை விட்டு வெளியேறும்பட்சத்தில் ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் தேதி நாளை (ஜுன் 25) காலை 11 மணிக்குள் முடிவுக்கு வருகிறது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஹெக்சாவர் நிறுவனத்தின் இணையதளம் சென்று நாளை காலை 11 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, மும்பை, புனேவில் நியமனம் செய்யப்படுவார்கள். சென்னையில் இருந்தபடி விண்ணப்பம் செய்வோருக்கு சென்னையிலேயே பணி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+