Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாத சம்பளம் ரூ.48,000.. இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு.. அதுவும் தலைநகர் சிங்கார சென்னையில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இந்து அறநிலையத்துறை சார்பில் உள்ள கோவிலில் மாத சம்பளமாக அதிகபட்சம் ரூ.48,700 வரை கிடைக்கும் வகையில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் ஏராளமான கோவில்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்து அறநிலையத்துறை மற்றும் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தான் தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

மொத்த பணியிடம் எவ்வளவு?

மொத்த பணியிடம் எவ்வளவு?

சென்னை ராயப்பேட்டையில் சித்தி புத்தி விநாயகர் மற்றும்‌ சுந்தரேஸ்வரர்‌ கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலில் காலியாக உள்ள கணினி இயக்குபவர், மின் பணியாளர், அர்ச்சகர், ஓதுவார், சுயம்பாகி, மேளக் குழு, பகல் காவலர், இரவு காவலர் , தூய்மை பணியாளர் தலா ஒன்று‌ என மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

கணினி இயக்குபவர் பொறுப்புக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு நிகரான படிப்புடன் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மின்பணியாளர் பணிக்கு ஐடிஐ படிப்பை முடித்து மின் உரிம வாரியத்தின் பி சான்று பெற்றிருக்க வேண்டும். அர்ச்சகர் பணிக்கு தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருப்பதுடன் ‌ ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில்‌ குறைந்தபட்சம்‌ ஒராண்டு படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஓதுவார்-சுயம்பாகி கல்வி தகுதி

ஓதுவார்-சுயம்பாகி கல்வி தகுதி

ஓதுவார்‌ பணிக்கு‌ தேவாரப்பாடசாலையில்‌ தொடர்புடைய துறையில் மூன்றாண்டு படிப்பையும், சுயம்பாகி பணிக்கு‌ ஆகம விதிப்படி நைவேத்தியம்‌ மற்றும்‌ பிரசாதம்‌ தயார்‌ செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். மேளக்குழு பணிக்கு தமிழ்நாடு அரசு நிறுவனம்‌ அல்லது பல்கலைகழக மாணியக்குழுவால்‌ அங்கீகரிக்கப்பட்ட இசைப்பள்ளியில்‌ சான்று பெற்றிருக்க வேண்டும். பகல் காவலர்-இரவு காவலர் மற்றும் தூய்மை பணியாளர்‌ பணிக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு?

சம்பளம் எவ்வளவு?

கணினி இயக்குபவருக்கு மாத சம்பளம் ரூ. 13,200 முதல் ரூ.41,800 வரையும், மின் பணியாளர் பணிக்கு ரூ.12,600 முதல் ரூ.39,900 வரையும், அர்ச்சகருக்கு ரூ.13,200 முதல் ரூ.41,800 வரையும், ஓதுவார் பணிக்கு ரூ.12,600 முதல் ரூ.39,900 வரையும், சுயம்பாகி பணிக்கு ரூ.13,200 முதல் ரூ.41,800 வரையும், மேளக்குழு பணிக்கு ரூ.15,300 முதல் ரூ.48,700 வரையும், கிடைக்கும். மேலும் காவலர், தூய்மை பணியாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.11,600 முதல் 36,800 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயதும், அதிகபட்சமாக 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வயது வரம்பானது 01.07.2022ன் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். அரசு விதிகளின் படி வயது தளர்வுகள் பொருந்தும். வயது தளர்வு பற்றி முழுவிபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழ்காணும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய கேட்கப்படும் ஆவணங்களை இணைத்து 2022 நவம்பர் மாதம் 17 ம் தேதி அல்லது அதற்கு முன்பு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை hrce.tn.gov.in இணையதளங்களிலும் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ஙகளை செயல் அலுவலர், சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோவில், இராயப்பேட்டை, சென்னை - 14 என்ற முகவரிக்கு 17.11.2022ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+