தமிழகத்தில் சத்துணவு மையங்களில் 8,997 காலி பணியிடங்கள்.. சம்பளம், தகுதி, விண்ணப்பம்.. முழு விவரம்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் உள்பட 8,997 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் யாரெல்லாம் சேரலாம். எவ்வளவு ஊதியம்.. தகுதிகள்.. உள்பட முழு வழிகாட்டுதல்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் கீழ் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 8,997 அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

ஏப்ரல் 23 கடைசி நாள்
இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி (திங்கட்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வருகிற ஏப்ரல் 23-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்கள்
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 முதல் 35 வயது வரை உள்ள அனைத்து பெண்களும் விண்ணப்பிக்கலாம். விதவைகள், ஆதரவற்ற பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் 25 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பெண்கள் 25 முதல் 38 வயது வரையில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
10 -ம் வகுப்பு தேர்ச்சி
அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 20 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து பெண்கள் விதவைகள், ஆதரவற்ற பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் வகுப்பினர் 20 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பெண்கள் 20 முதல் 43 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கிராமங்கள் எப்படி
விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அதே கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பிற கிராமத்தை சேர்ந்தவராகவோ, அந்த கிராம ஊராட்சியின் எல்லையின் அருகில் உள்ள அடுத்த கிராம ஊராட்சியை சேர்ந்தவராகவோ இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும. மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளில் உள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே வார்டு அல்லது அருகிலுள்ள வார்டுகளை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இதுதான் அரசு மாவட்ட வாரியாக வெளியிட்ட அறிவிப்புகள் ஆகும்.
வழிகாட்டுதல்கள்
இந்நிலையில் தமிழகத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வது குறித்து முழு வழிகாட்டுதல்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம்.
நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்கள்
தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்குப் பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய
நிலை 1 (Level of Pay -ரூ.3000-9000) ஊதியம் பெறுவார்கள்.
கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகளுக்கு 50 சதவீத மதிப்பெண்களும், நேர்முகத் தேர்விற்கு 50 சதவீத மதிப்பெண்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர் அனைவரும் கட்டாயம் தமிழில் சரளமாக எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்
பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தோல்வி/ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பதாரரின் தகுதிகள் அனைத்தும் எந்த தேதியில் அறிவிப்பு வெளியிடப்படுகிறதோ அந்த தேதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைபட்ட தூரம் 3 கிமீக்குள் இருக்க வேண்டும் (ஊராட்சி-குக்கிராமம்-வருவாய் கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை)அனைத்து நியமனங்களும் அரசு விதிகளின்படி 200 புள்ளிகள் இனசுழற்சி முறையை பின்பற்றி மேற்கொள்ளப்படும்.
மாற்றுத் திறனாளி ஒதுக்கீடு தொடர்பாக பரிந்துரைகள் என்ன:
குறைவான பார்வைத் திறன் (மூக்குக்கண்ணாடி மூலம் சரி செய்யப்பட்டது)
உடல் இயக்க குறைபாடு (ஒரு கால்)
குணப்படுத்தப்பட்ட தொழுநோய் (40% கைகளின் முழு செயல்பாட்டுதிறன்,உணர்திறன் மற்றும் செயல்திறன் உள்ளடக்கியது)
திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள்
குறிப்பிட்ட கற்றல்திறன் குறைபாடு (மிதமான)
நேர்முகத் தேர்வு - பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள்
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத் தேர்வினை அந்தந்த வட்டாரங்களில் நடத்திட வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்பு - ஆய்வுக் குழுவின் மூலம் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ள சான்றிதழ்களின் அசலினை சரிபார்க்க வேண்டும்.
அசல் சான்றிதழ்களை சரிபார்த்தவுடன் அச்சான்றுகளை உரிய விண்ணப்பதாரரிடமே திரும்ப அளித்திட வேண்டும்.
நேர்முகத் தேர்வு
விண்ணப்பதாரர்களை நேர்முகத் தேர்விற்கு அழைத்திடும் போது மையவாரியாக பிரித்து தனித்தனியே நேர்முகத் தேர்வுப் பட்டியல்படி அழைக்க வேண்டும்.
தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விடுதலின்றி நேர்முகத் தேர்விற்கான அழைப்பானை அனுப்பிட வேண்டும்.
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவிருக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப இடவசதி, கழிப்பிட வசதி, குடிநீர், நாற்காலி, மேசை உள்ளிட்டஅனைத்து வசதிகளை தயார் செய்திட வேண்டும்.
காலிப்பணியிட விவரங்களை அறிவிக்கும் முறைகள்
அனைத்து நியமனங்களுக்கும் அரசு விதிகளின்படி 200 புள்ளிகள் இனசுழற்சி முறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். மாநிலம் முழுவதும் வட்டார வாரியாக நியமனம் செய்யப்படவுள்ள காலிப்பணியிடங்களை தேர்வு செய்து மையங்கள் பட்டியலிட வேண்டும்.
மாவட்டத்தினை ஒரு அலகாகக் கொண்டு இனசுழற்சி நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
இனசுழற்சி முறை
இனசுழற்சி முறையிலான எண்ணிக்கையில் காலிப்பணியிடங்கள் கணக்கிட்டு, சென்ற தேர்வு முறையின் போது இறுதியாக எந்த இனசுழற்சி பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டதோ அந்த பிரிவிற்கு அடுத்த இனசுழற்சி வகுப்பிலிருந்து தற்போதைய தெரிவினை தொடங்க வேண்டும்.
25 சதவீத பணியிடங்கள் விதவைகள்
மேலும், கடந்த முறை நியமனம் செய்யப்பட்ட பணியிடங்களில் பின்னடைவு காலிப்பணியிடங்கள் (backlog vacancies) இருப்பின் அப்பணியிடங்கள் முதலில் நிரப்பிட வேண்டும். உதவியாளர்கள் பணியிடத்திற்கு நேரடி நியமனம் செய்திடும்போது 25 சதவீத பணியிடங்கள் விதவைகள்/கணவரால் கைவிடப்பட்டோரைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு
தமிழகத்தில் மாவட்ட அளவில் விண்ணப்பங்களை ஆய்வு செய்திடும் போது 25 சதவீதம் விதவைகள் மற்றும் 4 சதவீத மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு செய்திடுவதை உறுதி செய்திட வேண்டும். அதன் பின்னரே நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட வேண்டும். நிரப்பப்படாத மாற்றுத் திறனாளிகள் ஒதுக்கீட்டை அடுத்த நியமனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்" இவ்வாறு தமிழக அரசின் சமூக நலத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications