மாதசம்பளம் ரூ.40,000.. என்ஜினீயரிங், மாஸ்டர் டிகிரி படித்தவர்களுக்கு சூப்பர் வேலை! செம வாய்ப்பு
ஹைதராபாத்: மத்திய அரசின் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் மாதசம்பளம் ரூ.40 ஆயிரம் அல்லது ரூ.1 லட்சம் என்ற அளவில் பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து பணியை தட்டித்தூக்கலாம்.
மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் என்ஆர்டிபிஆர் எனும் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜேந்திரநகர் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: என்ஆர்டிபிஆர் நிறுவனத்தில் தற்போது 10 பிரிவுகளில் கன்சல்டன்ட் பணிக்கு 19 பேரும், அக்கவுண்ட்ஸ் மற்றும் டிரெய்னிங் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கோஆடினேட்டர் பதவிக்கு 5 பேர் என மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு: கன்சல்டன்ட்ஸ் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 62 வயதுக்குள் இருக்க வேண்டும். டிரெய்னிங், அக்கவுண்ட்ஸ் மற்றும் அட்மினிஸ்ட்ரேட்டவ் கோஆடினேட்டர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 16.08.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
மாத சம்பளம்: கன்சல்டன்ட்ஸ் பணிக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். டிரெய்னிங் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். கன்சல்டன்ட்ஸ் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மாஸ்டர் டிகிரி, பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் என்ஜினியரிங், ஐடி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பம்: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் http://career.nirdpr.in/ எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி , எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் பணியமர்த்தப்படுவார்கள்.
பணி காலம்: இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும் கன்சல்டன்ட்ஸ் பணிக்கு தேர்வாகும் நபர்கள் குறைந்தது 2 ஆண்டு வரை பணியமர்த்தப்படுவார்கள். டிரெய்னிங், அக்கவுண்ட்ஸ் மற்றும் அட்மினிஸ்ட்ரேட்டவ் கோஆடினேட்டர் பணிக்கு தேர்வாகும் நபர்கள் 5 ஆண்டுகள் வரை பணியமர்த்தப்பவுார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு காணவும், விண்ணப்பம் செய்யவும் Click Here
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications